இதுனாலதான் ‘பில்லா’ ரீமேக்கில் நடித்தேன்! அப்போ ரஜினி சொன்னதால இல்லையா? வைரலாகும் அஜித் பேட்டி

கோலிவுட்டின் கிங் ஆஃப் ஒபனிங் என்று புகழப்படுபவர் நடிகர் அஜித். இவர் கெரியரில் ஏகப்பட்ட படங்கள் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் ஒவ்வொரு முறையும் சறுக்கல்களை சந்திக்கும் போதெல்லாம் அந்த நேரத்தில் ஒரு படம் வெளி வந்து மார்கெட்டை உயர்த்தி விடுகிறது. அந்த வகையில் அஜித் இனிமேல் அவ்ளோதான் என்ற சூழ்நிலையில் இருந்த போது அவருக்கு கை கொடுத்து தூக்கிய படமாக அமைந்தது ‘பில்லா’ திரைப்படம்.

இது ரஜினி நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தின் ரீமேக். ரஜினியின் பில்லாவை எப்படி ரசிகர்கள் கொண்டாடினார்களோ அதற்கும் மேலாக அஜித் நடித்த பில்லாவை இந்தியாவே கொண்டாடியது என்று சொல்லலாம். படத்தில் அஜித்தின் ஸ்டைல், மாஸ் என ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதுவரை செண்டிமெண்ட், காதல் போன்ற காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த அஜித் பில்லா படத்திற்கு பிறகு டோட்டலாகவே மாறினார்.

அஜித் மீது ரசிகர்களுக்கு அதிகளவு க்ரேஸ் உருவானது. எப்படி பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்தார் என்ற ஒரு தகவல் இணையத்தில் வெளியானது. அதாவது ஒரு முறை அஜித்தும் ரஜினியும் சந்தித்து கொண்ட போது அஜித்தின் வரிசையான தோல்விகளை அறிந்த ரஜினி அஜித்திடம் அவராகவே ‘ஏன் நீங்க பில்லா ரீமேக்கில் நடிக்கக் கூடாது’ என்று கேட்டதாக ஒரு செய்தி இருக்கிறது.

ஆனால் பில்லா படத்தை பற்றி அஜித்தே ஒரு பேட்டியில் கூறியது இப்போது வைரலாகி வருகின்றது. அவரிடம் நிருபர் ஒருவர் ‘ஏன் பில்லா படத்தை தேர்வு செய்தீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அஜித் ‘சமீபகாலமாக வேறொரு மொழிகளில் ரிலீஸான படங்களை ரீமேக் செய்து நடித்து வருகிறோம். ஏன் நம் மொழியிலேயே உள்ள ஒரு படத்தின் ரீமேக்கில் நடிக்க கூடாது என தோன்றியது.’

‘மேலும் ரஜினி நடித்த பில்லா திரைப்படம் தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே பேசப்பட்டும் திரைப்படம். அதுமட்டுமில்லாமல் ரஜினியின் வாழ்க்கையில் டர்னிங் பாயிண்டாக இருந்த ஒரு திரைப்படம். அதனால்தான் அதன் ரீமேக்கில் நடித்தேன்’ என்று அஜித் கூறியிருக்கிறார்.

ஆனால் இதில் ரஜினி சொன்னதாக எதையுமே அஜித் சொல்லவில்லை. ஒருவேளை அது அவர்கள் பர்ஷனலாக சந்தித்து பேசியது என கருதி அதை சொல்லாமல் விட்டாரா என்றும் தெரியவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகராக அஜித் இருந்துவருகிறார் என்பதுதான் உண்மை.

Related Articles
Next Story
Share it