Anirudh: அமரனால் அம்பலமான அனிருத் சுயரூபம்... அப்படி என்ன வன்மம்?... ட்விட் போட்டு சிக்கிக்கிட்ட ராக் ஸ்டார்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 12:00:50  )
Anirudh: அமரனால் அம்பலமான அனிருத் சுயரூபம்... அப்படி என்ன வன்மம்?... ட்விட் போட்டு சிக்கிக்கிட்ட ராக் ஸ்டார்..!
X

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமரன் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் தொடர்ந்து சக்க போடு போட்டு வருகின்றது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

மேலும் கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது. படம் வெளியானது முதலே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன போதிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக அமரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.

கடந்த 7 நாட்களில் மட்டும் 170 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. படத்தை பார்த்த பலரும் பட குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவகுமார், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் தொடர்ந்து படத்தினை பார்த்து விட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சினிமாவை தாண்டி அரசியல் பிரபலங்களும் படம் குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் ராக்ஸ்டார் அனிருத் அமரன் திரைப்படத்திற்கு நேற்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த வாழ்த்தில் ஒருவரின் பெயர் மட்டும் இடம்பெறவில்லை. அது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பெயர் தான். அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் இந்த படத்தில் அமைக்கப்பட்ட பாடல் மற்றும் பிஜிஎம் மற்றொரு முக்கிய காரணம்.

ஜிவி பிரகாஷ் இப்படத்தில் மிகச் சிறப்பான இசையை கொடுத்திருக்கின்றார் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் சக இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷை மட்டும் அனிருத் வாழ்த்தாதது ஏன்? என்று ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள். அப்படி என்ன அவர் மீது கோபம்.

சினிமாவில் சக இசையமைப்பாளராக இருந்து வரும் ஜிவி பிரகாஷிற்கு மறந்து வாழ்த்த கூறவில்லையா? அல்ல வேண்டும் என்றே அவரை ஒதுக்கி படத்தில் நடித்த மற்ற பிரபலங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா? என்று சினிமா விமர்சகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அமரன் திரைப்படத்திற்கு வாழ்த்து கூறுகிறேன் என்று ட்வீட் போட்டு ஜிவி பிரகாஷ் மீது வன்மத்தை கக்கி விட்டாரே என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story