Categories: latest news

கமலை விடுங்க… புராணப்படங்களில் ரஜினியாவது நடிச்சிருக்கலாமே… ஏன் நடிக்கல?

80 காலகட்டத்தில் தமிழ்த்திரை உலகம் ஆரோக்கியமாக இருந்தது. கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களாக வெளிவந்தன. அப்போது எந்த ஒரு நடிகர் நடித்தாலும் கதை சூப்பராக இருந்தால் படம் ஓடும் என்று இருந்தது. அந்த நடிகர் எப்படி நடித்தாலும் ஓடும் என்று இல்லை. படத்தின் கதை, நடிப்பு, காமெடி, பைட், சென்டிமென்ட் என எல்லாமே சூப்பராக இருக்க வேண்டும். அந்த வகையில் அப்படிப்பட்ட படங்கள் நிறைய வந்தன.

கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், மோகன், கார்த்திக், ராம்கி, அர்ஜூன் என பல ஹீரோக்களின் படங்கள் வெற்றிவாகை சூடின. அதே காலகட்டத்தில் புராணப்படங்களும் வந்து சூப்பர்ஹிட் அடித்தன. சிவாஜி தான் பெரும்பாலும் புராணப்படங்களில் நடித்து இருந்தார். விஜயகாந்த் கூட மீனாட்சி திருவிளையாடல் என்ற ஒரு புராணப்படத்தில் நடித்துள்ளார்.

ரஜினி, கமல் இருவரும் புராணப்படங்களில் நடிக்காததற்கு அந்த நடிகருடைய மார்க்கெட் கூட ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். அவர்களைப் பொருத்தவரைக்கும் மிகக்குறுகிய காலத்திலேயே மிக உயர்ந்த சம்பளம் வாங்குற அளவுக்கு உயர்ந்து விட்டார்கள்.

அதனால அந்த சம்பளத்தைக் கொடுத்து ஒரு திரைப்படத்தை எடுத்தா அது எந்தளவு வசூலிக்கும் என்கிற சந்தேகம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் மத்தியில் இருந்த காரணத்தினால்தான் புராண கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைக்கல.

இந்த இருவரில் கமல் புராணப்பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பது நீங்களே அறிந்த விஷயம். ரஜினிகாந்த் அப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கக்கூடும். அவருக்கு எதிராக அமைந்தது நான் குறிப்பிட்டு இருப்பதைப் போல மார்க்கெட் தான் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

கமல் கூட தசாவதாரம், காதலா காதலா போன்ற படங்களில் ஒரு சில சீன்களில் பக்தி இலக்கியம் சம்பந்தமாக நடித்து இருந்தார். இவ்வளவுக்கும் அவர் ஒரு நாத்திகவாதி. படத்திற்கு தேவை என்ற பட்சத்தில் நடித்தார். சிவன் வேடமிட்டு ரஜினியும் ஒரு படத்தில் பைக்கில் வருவார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

15 minutes ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

2 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

5 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

8 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

20 hours ago