STR 48 உருண்ட கதை.... சூப்பர்ஸ்டாருல ஆரம்பிச்சி எங்கே போய் முடிஞ்சிருக்குன்னு பாருங்க...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:54  )

சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரிய இடத்துக்கு வந்துட்டாருன்னு சொன்னாங்க. வெந்து தணிந்தது காடு வந்தும் அவர் ஹிட் ஆகல. எஸ்டிஆர் 48ஐ கமல் தயாரிக்கப் போறாருன்னதும் ஓகேங்கற இடத்துக்கு வந்துட்டாரு. அந்தப் படத்துக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டாரு.

அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. அதுக்குக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகைக்காகத் தான் கமல் தக் லைஃப்ல நடிக்க வச்சிருக்காரு. அவருக்காகவே மணிரத்னம் கதையில் சில மாற்றங்களைச் செய்துள்ளாராம்.

STR48 தேசிங்கு பெரியசாமி எழுதியது. ரஜினிக்காகப் பண்ணிய கதை தானாம் அது. ஒரு கட்டத்தில் இந்த அழுத்தமான கதைக்கு தேசிங்கு பெரியசாமி தாக்குப்பிடிப்பாரான்னு சந்தேகம் அவருக்கு வருது. அதை வேறொரு நடிகரை வைத்து எடுக்கச் சொல்றாரு.

அது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கிட்ட போகுது கதை. உடனே அதுக்கு அவர் ரஜினியே 'ஓகே' பண்ணி ஓரம் கட்டிட்டாரு. இந்தக் கதைக்கு யாரு சரியா இருப்பாரு? நீங்களே சொல்லுங்கன்னு டைரக்டர்கிட்ட கேட்குறாரு. அதுக்கு சிம்புன்னு சொல்றாரு. சிம்புவுக்கு யாரு பொருத்தமா இருப்பாருன்னு சொல்றாரு.

அப்புறம் 'நீங்க யாருன்னு சொல்லுங்க?'ன்னு தேசிங்கு பெரியசாமி கேட்குறாரு. ஐசரி கணேஷூக்கு கமல் நண்பர். உடனே 'கமல் பொருத்தமா இருப்பாரு'ன்னு சொல்றாரு. உடனே கதை கமல்கிட்ட போகுது. கமல் கதை கேட்குறாரு. கதையைக் கேட்டுட்டு 'இது எனக்குப் பொருத்தமான கதையா?'ன்னு கேட்குறாரு.

'ஆமா'ன்னு சொல்றாரு. உடனே 'நான் நடிக்கலன்னா யாரு பொருத்தமா இருப்பாங்க?'ன்னு கேட்குறாரு. 'சிம்பு'ன்னு சொல்ல, 'என் சாய்ஸ்சும் அவரு தான்'னு கமல் சொல்றாரு. சிம்புவும் கதை கேட்குறாரு. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கப் போகுதுன்னதும் சிம்புவுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கு. சூப்பர்ஸ்டார் நிராகரித்த கதையை லிட்டில் சூப்பர்ஸ்டார் பண்ணப்போறாருன்னது பெரிய விஷயம்.

தேசிங்கு பெரியசாமிக்கு அந்த நேரத்துல என்ஓசி பிரச்சனை வருது. ராஜ்கமல் பிலிம்ஸ் ஒரே போனில அந்தப் பிரச்சனையை முடிச்சிக் கொடுத்தாரு. அப்புறம் அந்தப் படத்தோட பட்ஜெட் 225 கோடின்னதும் படம் டிராப் ஆனது. இந்தப் பட்ஜெட்டுக்கு சிம்பு தாங்குவாரான்னு பார்த்தா ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்களாம்.

அதனால தான் படம் டிராப்புன்னு சொல்றாங்க. லண்டன், தாய்லாந்துல எடுக்கக்கூடிய படம். சரி படத்தை கிரீன்மேட்ல எடுக்கலாம்னு பார்த்தா எஸ்டிஆருக்கு அது விருப்பமில்லை. அப்புறம் அது டிராப் ஆனதும் STR 48 தக் லைஃப் ஆனது. STR49 சிம்புவே நடித்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போறாராம்.

STR50ஐ தேசிங்கு பெரியசாமி தான் பண்ணப் போறாராம். அதே கதை தானாம். மிகப்பெரிய தயாரிப்பாளர் உள்ளே இறங்குகிறாராம். STR50 ஆக அந்தப் படம் வந்தால் மிகப்பெரிய படமாக மாறும் என்றும் பேசப்படுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Next Story