கமல் மணிரத்னம் காம்போவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமலும் மணிரத்னமும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். அதனால் இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு காரணமாக இருக்கிறது. நாயகன் திரைப்படத்தின் தாக்கம் இன்னும் நம் ரசிகர்களிடம் இருந்துவருகிறது. ஒரு கல்ட் கிளாசிக் படமாகவே இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதனால் இவர்கள் இணைந்தாலே அந்த மாதிரி படத்தைதான் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நாயகன் கதை வேறு. தக் லைஃப் கதை வேறு என கமல் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனால் டிரெய்லரை பார்த்தாலும் என்ன மாதிரியான கதை என ஊகிக்கமுடியவில்லை. இதுவரை சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் டிரெய்லரில் கமலுடன் டூயட் பாடுகிறார் திரிஷா.
இன்னொரு பக்கம் அபிராமியும் கமலுக்கு ஜோடியாக இருக்கிறார். ஆரம்பத்தில் அப்பா மகனாக காண்பித்து கடைசியில் கமலும் சிம்புவுமே ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். அதனால் படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கிறது. இந்த நிலையில் தான் துவண்டிருந்த நிலையில் எனக்கு உதவியவர்கள் மணிரத்னம் , ரஹ்மான் என சிம்பு நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
யாருமே என்னை வைத்து படம் எடுக்க பயந்து கொண்டிருந்த நிலையில் மணிரத்னம் சார் என்னை நம்பி வந்தார். அதனால் அவரை மறக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அதை போல் அஞ்சலி படத்தை பார்க்கும் போது அஞ்சலி பாப்பாவுக்கு அண்ணனாக ஒரு மலையாள நடிகர் நடித்திருப்பார். அதை பார்ப்ப்கும் போது ஏன் என்னை மணி சார் கூப்பிடலைனு நான் அழுதேன்.
அதற்கு என் அப்பா அந்த கதைக்கு அவர் பொருந்தியிருப்பார். அதுனாலதான் உன்னை கூப்பிடலைப்பா என்று என் அப்பா என்னிடம் கூறினார் என சிம்பு இந்த சம்பவத்தை பற்றி பேசினார்.
