கோட் சக்சஸ் பார்ட்டியில் வெங்கட்பிரபு ஏன் மிஸ்ஸிங்?!.. இதான் பஞ்சாயத்தா?!....

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:44  )

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான திரைப்படம் தி கோட் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

படத்தில் விஜயுடன் சினேகா மீனாட்சி சவுத்ரி பிரசாந்த் மோகன் பிரபுதேவா பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.

இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜயின் வயதை குறைவாக காட்டுவதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் படத்திற்கு கூடுதல் ஹைப்பாக இருந்தது ஒரே ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆடியது தான். அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இப்படி பல அம்சங்களைக் கொண்ட இந்த தி கோட் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டிருந்தார்.

ஒட்டுமொத்தமாக தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 455 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை சமீபத்தில் படத்தில் நடித்த விஜய் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ராகுல் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் சகோதரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கேக் வெட்டி கொண்டாடினீர்களே. அதில் படத்தின் இயக்குனர் இருந்தாரா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

அதன் பிறகு தான் ரசிகர்களும் இந்த கேள்வியை கேட்க தொடங்கினர். ஏன் வெங்கட் பிரபுவை அழைக்கவில்லை? வேட்டையன் திரைப்படத்தை விஜயுடன் சேர்ந்து பார்த்த வெங்கட் பிரபு கேக் வெட்டி கொண்டாடும்போது மட்டும் ஏன் அழைக்கப்படவில்லை என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

இதற்கு கோடம்பாக்கத்தில் உள்ளோர் கூறிய தகவல் இதுதான். அதாவது ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கண்டிப்பாக அதன் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஏதாவது ஒரு வகையில் மனக்கசப்பு வரத்தான் செய்யும். அப்படி ஏதேனும் இருந்ததா என தெரியவில்லை.

ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு வெங்கட் பிரபுவை பல மீடியாக்கள் தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க அழைத்து இருக்கின்றனர். ஆனால் அதற்கு வெங்கட் பிரபு தலையசைக்கவே இல்லையாம். ஏதோ பட்டும் படாமலும் இருந்ததாக சொல்கிறார்கள். வெங்கட் பிரபு வராததற்கு உண்மையில் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் தெரியும் என கோடம்பாக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Next Story