விஜயகாந்த் பயோபிக் உருவாகிறதா? யாருக்கு அது சாத்தியம்?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:28  )

தமிழ்சினிமா உலகில் ரஜினி, கமல் என்ற இருபெரும் ஜாம்பவான்களுக்குப் பிறகு கோலோச்சிய நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். அந்த வகையில் அவர் அரசியலிலும் மிகப்பெரிய சக்தியாக விளங்கினார்.

இவரது வாழ்க்கை வரலாற்றைப் பற்றி திரைப்படம் எடுக்க முடியுமா? அப்படி எடுக்க வேண்டுமானால் அது யாருக்கு சாத்தியம் என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

விஜயகாந்த்தோட வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தாலோ அல்லது ஒரு சீரிஸா எடுத்தாலோ ரொம்ப நல்லாருக்கும்னு நினைக்கிறேன். அவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைந்ததாக இருக்கட்டும். அதுல சாதித்ததாக இருக்கட்டும்.

நடிகர் சங்கத்தில் இருந்ததாக இருக்கட்டும். அப்புறம் அரசியல்ல போய் எதிர்க்கட்சித் தலைவராக வந்தது ஆகட்டும். இப்படி நிறைய அவரோட வாழ்க்கையில ஏற்ற, இறக்கங்கள் இருந்துருக்கு.

அதனால அவரோட பயோபிக்கிற்கு ஒரு நல்ல ஸ்கிரிப்டை உருவாக்கி படமா எடுத்தா மணிரத்னம் அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கினா கண்டிப்பா அது வேற லெவல்ல ஹிட் அடிக்கும்னு தோணுது. இதைப் பற்றிய உங்க கருத்து என்னன்னு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

பயோபிக்கைத் தயாரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதற்கு மிகப்பெரிய பொருளாதார பலம் வேண்டும். விஜயகாந்தோட பயோபிக்கை உருவாக்குவதற்குப் பொருளாதார பலத்தோட ஒரு நிறுவனம் வந்ததுன்னா நிச்சயமா உருவாக்க முடியும். இல்லன்னா அவரது குடும்பம் சம்பந்தப்பட்டவர்கள் உருவாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைந்தது தமிழ்சினிமா உலகிற்கு பேரிழப்பு. என்றாலும் அவரது நினைவுகளை மீட்கும் வகையில் சமீபத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் ஏஐயில் நடிக்க வைத்தனர். தொடர்ந்து லப்பர் பந்து படத்திலும் அவரைக் கௌரவப்படுத்தும் வகையில் பல காட்சிகளில் விஜயகாந்த் படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்களைக் காட்சிப்படுத்தி இருந்தனர்.

Next Story