அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த STR48!.. வச்சு டெஸ்ட்ல பாஸ் ஆயிடுவாரா தேசிங்கு பெரியசாமி?..

நடிகர் சிம்பு : தமிழ் சினிமாவில் தான் ஹீரோவாக நடித்த தொடங்கிய சமயத்தில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சிம்பு. அதன் பிறகு காதல் சர்ச்சை, ரெட் கார்டு போன்ற பிரச்சனைகளில் சிக்கி தனது பெயரை எடுத்துக் கொண்டார். இதனால் உடல் எடை அதிகரித்து படங்களில் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
பின்னர் சிறிது பிரேக் எடுத்துக் கொண்ட சிம்பு கடகடவென தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் மாநாடு என்று திரைப்படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கின்றார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.
இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் படம் தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியானதே தவிர அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இதற்கு இடையில் கமலஹாசன் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டது. அதற்கு காரணம் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் என்று கூறலாம்.
கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் இந்த படத்தின் பட்ஜெட் இருப்பதால் பல தயாரிப்பாளர்கள் இந்த படத்தை தயாரிப்பதற்கு தயங்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட நடிகர் சிம்புவே இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறி வந்த நிலையில் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் நடிகர் சிம்புவுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்த காரணத்தால் இவரே தயாரிப்பாளர்களிடம் இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து துபாயில் இருக்கும் தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு முதலில் சம்மதம் தெரிவித்து இருக்கின்றார். ஆனால் படத்தை ஒரு நூறு கோடி பட்ஜெட்டில் எடுக்கலாம் என்கின்ற முடிவில் இருந்து வருகிறாராம். ஆனால் படத்தை எடுப்பதற்கு 150 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் தயங்கி நிற்கும் தயாரிப்பாளர் இயக்குனருக்கு ஒரு நிபந்தனை வைத்திருக்கின்றார். முதலில் ஒரு மூன்று நாட்களில் சிம்புவை வைத்து ஒரு டீசர் போன்று எடுத்து காட்டுங்கள். அது தனக்கு பிடித்திருந்தால் இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று தோன்றினால் நான் இப்படத்தை தயாரிக்கின்றேன் என்று கூறியிருக்கின்றார் .இதற்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் மூன்று நாட்களில் டீசர் எடுத்தால் அது அவ்வளவு நன்றாக இருக்காது. நிச்சயம் ஒரு பத்து நாளாவது ஷூட்டிங் எடுத்து டீசர் தயாரித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். தயாரிப்பாளர் கண்ணன் ரவி வைத்திருக்கும் டெஸ்டில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.