அந்த நடிகை மட்டும் குறுக்கே வரலைனா? சில்க் ஸ்மிதாவை காதலிச்சிருப்பேன்! பிரபலம் சொன்ன சீக்ரெட்
80களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. தன்னுடைய காந்தக்கண்ணால் அனைவரையும் சொக்க வைத்தவர். கொஞ்சும் தமிழில் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். அந்த காலகட்டத்தில் பெரிய பெரிய முன்னணி நடிகைகளாக இருந்தவர்களே சில்கை பற்றி பெருமையாக பேசியதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஏன் ராதிகாவே ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதாவை பற்றி ‘என்ன ஒரு பொண்ணு? அவங்க மாதிரி அழகு யாருமே கிடையாது’ என சொல்லியிருக்கிறார். பல பேர் சில்கின் அழகில் மயங்கியவர்கள். வினு சக்கரவர்த்தியால் இந்த தமிழ் சினிமாவில் அறிமுகமான சில்க் முதன் முதலில் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகமானார்,
அதை தொடர்ந்து பெரும்பாலான படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆடி தனக்கான க்ரேஸை அதிகமாக்கினார். ஒரு படத்திற்கு ஹீரோ, ஹீரோயின்கள் கால்ஷீட்டை வாங்குவதற்கு முன் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டை வாங்கத்தான் இயக்குனர்கள் தவம் கிடப்பார்கள்.
அந்தளவுக்கு எல்லா படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார் சில்க் ஸ்மிதா. ஐட்டம் பாடலுக்கே ஆடிய சில்கை முதன் முதலில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்தவர் பாரதிராஜா. தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு மனைவியாக நடித்தார்.
அந்த படத்தின் வெற்றிவிழாவுக்கு வந்த எம்ஜிஆர் கூட சில்க் ஸ்மிதாவை பார்த்து இனிமேல் இப்படியே நடி என்று சொன்னதாக ஒரு செய்தியும் இருக்கிறது. இந்த நிலையில் பிரபல கதாசிரியரும் நடிகருமான ஜி.எம்.குமார் சில்க் ஸ்மிதாவை பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை கூறினார்.
அதாவது சில்க் ஒரு தேவதை என்றும் அவளை மாதிரி ஒரு தங்கமான பொண்ணே கிடையாது என்றும் கூறிய ஜிம் குமார் சில்க் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டிருந்தார் என்றும் அந்த நேரத்தில் நான் நடிகை பல்லவியோடு சீரியஸாக இருந்ததனால் சில்கை காதலிக்க முடியவில்லை என்றும் இல்லையென்றால் 100 சதவீதம் சில்கின் மேல் காதலில் விழுந்திருப்பேன் என்றும் ஜி.எம்.குமார் கூறினார்.