எல்லாரும் மூக்குல சொல்வாங்க. நீ வாயில சொல்லு... எழுத்தாளரை நக்கலடித்த கவுண்டமணி

காமெடி நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் குறித்து எழுத்தாளர் ராஜகோபால் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு 70 படங்களுக்கும் மேலாக காமெடி டயலாக்குகள் எழுதியுள்ளார். தனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு சொல்கிறார்.
வைதேகி கல்யாணம்: மணிவாசகம் 1990ல் நம்ம ஊரு பூவாத்தா என்ற படத்தை இயக்குகிறார். அவரிடம் அசோசியேட்டாக செந்தில் ராஜகோபாலை சேர்த்து விடுகிறார். மணிவாசகம் இயக்கிய 2வது படம் வைதேகி கல்யாணம். 'பத்தினி பத்த வச்சா வாழமட்டையும் பத்திக்கும்'னு ஒரு வசனம் எழுதுனேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சிட்டு. இதை படம் முழுக்க டிராக்கா வர்ற மாதிரி வச்சிடுவோம்னாரு. அப்போ அந்தப் படத்துல கவுண்டமணி நடிக்கிறார்.
செக்ஸா எழுதுவாரே அவரா?: அவர் இயக்குனர் மணிவாசகத்திடம் 'என்னடா மணிவாசகம் டயலாக் எல்லாம் ரெடி பண்ணிட்டியா? முதல் படமா மாதிரி காமெடி வருமா? அதைவிட நல்லாருக்குமா?'ன்னு கேட்டார். அதற்கு 'இதுல ராஜகோபால் எழுதுறாரு. நல்லா வரும்னு சொன்னாரு. யாரு செக்ஸா எழுதுவாரே அவரான்னு கேட்டுருக்காரு. நான் எங்கே செக்ஸா எழுதுனேன். ஒரே ஒரு தடலை ஆடியோ மட்டும் வரும். அது திண்டிவனம், விழுப்புரம் பஸ்ஸ்டான்டுகள்ல அப்போ போடுவாங்க.
டபுள்மீனிங் வசனம்: வாடா கொட்டைமுத்து என்ன பண்றே... நான் இங்கே போயிட்டு வந்தேனேன்னு வரும். அதை யாரோ அவருக்கிட்ட சொல்லிக் கேட்டுருக்காரு. அதைக் கேட்டுத்தான் சொல்லிருக்காரு. கவுண்டமணியைப் பொருத்தவரை டபுள்மீனிங் வசனம் வரக்கூடாதுங்கறதுல தெளிவா இருப்பாரு. செந்தில் கூட வர்ற ஆளுன்னதும் கவுண்டமணி இப்படி கேட்டுருக்காரு. நான் மணிவாசகத்திடம் கேட்டேன்.
முதல் சீன்லயே தகராறு: 'நான் எந்தப் படத்துல அப்படி செக்ஸா எழுதிருக்கேன்'னு மணிவாசகத்திடம் கேட்டேன். 'யப்பா அவரைப் பற்றித் தெரியாது. கோபமா ஆகிட்டாருன்னா டேட் கிடைக்காது'ன்னாரு. அப்புறம் முதல் சீன் களத்து மேட்டுல. கவுண்டமணி என்னை 'பேப்பரை படி'ன்னு சொல்றாரு. 'நான் சொல்றேன்'னு சொன்னேன். 'பேப்பர்ல இருக்கறதைத் தானே சொல்லப்போற. பேப்பரை படி'ன்னாரு. 'அது கொஞ்சம் சரியா வராது'ன்னு சொல்றேன். 'அது எப்படி நீ எழுதுனது தானே வரும்'னாரு.
அப்புறம் கவுண்டமணி 'யப்பா மணிவாசகம் சூட்டிங்கை நாளைக்கு வச்சிக்கோங்க'ன்னாரு. எனக்கு நாலாவது படம். எனக்கும் கோபம் வந்துடுச்சு. 'சரி பேக்கப் பண்ணிட்டு எனக்கும் நைட்டுக்கு டிக்கெட் போடுங்க'ன்னு சொல்லிட்டேன். டைரக்டர் கேட்கவும், நானும் சொல்லி கோபப்பட்டேன். அப்புறம் சமாதானப்படுத்தி நடிக்க வச்சாரு மணிவாசகம். கவுண்டமணி சொன்னாரு.
வாய்ல சொல்லு: 'வாப்பா எல்லாரும் மூக்குல சொல்வாங்க. நீ வாய்ல சொல்லுவ. வா வந்து சொல்லு'ன்னாரு. அதுக்கு அப்புறம் ஆமா, படிக்கிறதை விட நல்லாதான் இருக்குன்னாரு. அந்தப் படத்துக்குப் பிறகு எங்களுக்குள்ள நல்ல ஒரு நட்பு வந்தது. என் மேல ஒரு நல்ல நம்பிக்கை. அதனால தான் 70 படங்கள் வரை போச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.