Categories: latest news

நடிக்கவே மாட்டேனு சொன்ன நயன்.. ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இப்படிலாம் நடந்ததா?

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாகவும் திகழ்ந்தார். விஜய் அஜித் சூர்யா ரஜினி என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த நயனுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்து வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். அது மட்டுமல்ல பிசினஸ் வுமனாகவும் இருந்து வருகிறார். ஏராளமான பிசினஸை கைவசம் வைத்திருக்கும் நயன் இன்னொரு பக்கம் நல்ல அம்மாவாகவும் இருந்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான நயன் ஒரு பக்கம் குடும்பம் ஒரு பக்கம் குழந்தை ஒரு பக்கம் தொழில் ஒரு பக்கம் நடிப்பு என பிசியான பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நயன் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து பெரிய வெற்றி படமாக அமைந்த திரைப்படம் கோலமாவு கோகிலா. அந்தப் படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்டை படத்தின் இயக்குனர் வைத்திருந்தார். நயனுக்கு ஜோடியாக யோகி பாபு என்று சொன்னதும் அனைவருக்குமே ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது .

ஏன் யோகிபாபுவுக்கே அது அதிர்ச்சியாக தான் இருந்தது. அதைப்பற்றி பல மேடைகளில் யோகி பாபுவே கூறியிருக்கிறார். என்னிடம் கேட்டது சரி முதலில் இதற்கு நயன் சம்மதித்தாரா என்று கூட தான் கேட்டதாக யோகி பாபு பல மேடைகளில் கூறியிருக்கிறார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பற்றி யோகி பாபு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

போதை பொருளை கடத்திக்கொண்டு வேனில் செல்லும் பொழுது திடீரென அந்த வேன் பிரேக் அடிக்க யாரும் எதிர்பாராத விதமாக யோகிபாபுவின் முகத்தில் நயன் அவருடைய காலை வைப்பது போன்ற ஒரு காட்சி. முதலில் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என நயன் கூறினாராம் .சரண்யா பொன்வண்ணனும் இந்த மாதிரி காட்சிகள் வேண்டாம் ரசிகர்கள் ஏதாவது சொல்வார்கள் என கூறி இருக்கிறார்கள் .

சும்மா காமெடிக்கு தானே இருக்கட்டும் என சொல்ல அதன் பிறகு தான் அந்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சிக்காக பல டேக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் நயன் முதல் டேக்கில் காலை தூக்கியதுதான் கடைசி டேக் ஓகே ஆகும் வரை அந்த காலை கீழே வைக்கவே இல்லையாம். ஏனெனில் ஒவ்வொரு முறையும் கீழே வைக்கும் பொழுது காலில் மண் ஒட்டும். அது யோகிபாபுவின் முகத்தில் படுமே என்ற காரணத்தினால் டேக் ஓகே ஆகும் வரை காலை தூக்கிக் கொண்டே தான் இருந்தாராம். அந்த அளவுக்கு ஒரு டெடிகேஷனான நடிகை நயன் என யோகி பாபு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago