Categories: Cinema News latest news

ஒன்லி தாதா.. இல்லனா போலீஸ்!.. தலீவர் 2.0 இதுதான்!.. ரஜினியை கலாய்க்கும் புளூசட்ட மாறன்!…

Rajinikanth: 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் ரஜினிகாந்த். நடிப்பை விட தனது ஸ்டைலை நம்பி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கமலுக்கு பின்னால் நடிக்க வந்தாலும் ஒரு கட்டத்தில் கமலை தாண்டி அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். ரஜினியே பொறாமைப்படும் படி ரஜினியின் வளர்ச்சி இருந்தது.

தோல்வியே பார்க்காதவராகவும், வசூல் மன்னனாகவும் இருந்த ரஜினி ஒரு கட்டத்தில் தோல்விகளை பார்க்க துவங்கினார். இதற்கு முதல் அடி போட்டது பாபா திரைப்படம். அதன்பின் லிங்கா, குசேலன், தர்பார், காலா, அண்ணாத்த, வேட்டையன் போன்ற படங்கள் ஹிட் அடிக்கவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் ரஜினியை கலாய்த்து டிவிட்டரில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார். தலீவர் 2.0: ரஜினிக்கு புடிச்சது இரண்டு கேரக்டர்கள்தான். தாதா இல்லனா அதிரடி போலீஸ் அதிகாரி. கபாலி, காலா, பேட்ட, தர்பார், வேட்டையன், ஜெயிலர், ஜெயிலர் 2, கூலி.

50 வயதை தாண்டினாலே ரிவால்வரை பிடிக்க கை நடுங்கும். ஆனால், நம்ம தலைவர் 75 வயதை தாண்டியும் ஏகே47, பிகே 47 என எல்லாத்தையும் அசால்ட்டா ஹேண்டில் பண்ணி தாதாவா கலக்குவார். உண்மையான போலீஸ் 60 வயசுல ரிட்டயர் ஆனா, இவர் 75 வயசுலயும் வில்லன் கோஷ்டியை துரத்தி துரத்தி என்கவுண்ட்டர் பண்ணுவார்.

டியூட்டியில் இருந்தாலும் தாடியை எடுக்காத ஒரே போலீஸ் இவர் மட்டும்தான். தலைவருக்கு எல்.சி.யூ கதையெல்லாம் பிடிக்காது. ஏன்னா படம் ஓடினா அது தன்னால ஓடினதா மட்டுமே இருக்கணும். தன்னுடைய படங்களில் சிவ்ராஜ்குமார், மோகன்லால், உபேந்திரா, அமீர்கான் போன்ற நடிகர்களை கேமியோ பண்ண வைப்பார். ஆனா, அவங்க படத்தில் இவர் நடிக்க மாட்டார். நெல்சனும், லோகேஷ் கனகராஜும் ஒரே ஒரு ஃபிளாப் கொடுத்தா போதும். அதோட அவங்களையும் கழட்டி விட்ருவாரு’ என கலாய்த்திருக்கிறார்.

Published by
சிவா