அஜித் கொடுத்த வாழ்க்கை… அப்போ பிளான் பண்ணி தளபதியை காலி பண்ணாரா? யுவனின் திட்டம்…

Published on: November 7, 2024
---Advertisement---

Yuvan shankar raja: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய சினிமா வாழ்க்கையை மாற்றியதே அஜித்குமார் தான் எனக் கூறி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனாக சினிமாவிற்குள் வந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. தமிழில் அதிக படங்களுக்கு இசையமைத்தவர். சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். 25 வருடத்தில் 150 படங்களுக்கு அதிகமாக இசையமைத்துள்ளார்.

1996ம் ஆண்டு அரவிந்தன் படத்தில் 16 வயதில் இசையமைத்தார். இருந்தும் பெரிய வரவேற்பு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கிடைக்கவில்லை. 6 வருடத்துக்கு பின்னர் துள்ளுவதோ இளமை படத்தில் இசையமைத்து இருந்தார். அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் அஜித்தின் தீனா படத்துக்கு இசையமைத்து தன்னுடைய ஆதிக்கத்தை தொடங்கினார்.

தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பலரின் மன அழுத்தத்துக்கு யுவனின் இசை மருந்தாக மாறியது. அந்த வகையில் ரசிகர்களிடம் வளர்ந்தார். ஆனால் கடைசியாக அவர் இசையில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ரசிகர்களிடம் விமர்சனத்தை குவித்தது. இதெல்லாம் என்ன பாட்டு என்ற ரீதியில் கேள்வி எழுப்பட்டது. விஜயின் ரசிகர்களே கோட் பாட்டால் கடுப்பான சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் யுவன் தன்னுடைய பேட்டி ஒன்றில் நான் சினிமாவுக்கு வந்த சமயத்தில் என்னை ராசியில்லாத இசையமைப்பாளர் என்று முத்திரை குத்திவிட்டனர். அதனால் பல வாய்ப்புகளும் தட்டி போனது. ஆனால் அந்த சமயத்தில் அஜித் என்னை வந்து நேரில் சந்தித்தார்.

என்னுடைய தீனா படத்தில் நீதான் எனக்கு இசையமைக்க வேண்டும் எனவும் கேட்டார். அந்த படத்தில் நான் இசையமைத்த பின்னரே என்னுடைய கேரியர் மாறியதாக தெரிவித்துள்ளார். அஜித் வாழ்க்கை கொடுத்ததற்காக அவருடைய மங்காத்தா படத்தில் மாஸ் மியூசிக் போட்ட யுவன் கோட்டை சொதப்பியது இதற்குதானா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment