என் பாட்டு உங்களுக்கு பிடிக்கலன்னா இதத்தான் செய்வேன்!.. யுவன் சங்கர் ராஜா பேட்டி!...

by ராம் சுதன் |

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா. ‘ரஹ்மான் வந்துவிட்டார். இனிமேல் உங்க அப்பா அவ்வளவுதான்’ என நண்பர் வட்டாரம் சொன்னதால் கோபப்பட்டு இசையமைக்க வந்தவர்தான் யுவன். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

ரஹ்மானை போல யுவனும் சிறு வயதிலேயே இசையமைக்க வந்தவர்தான். ஆனால், இசையமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது உண்டு. அதோடு, பாடலுக்கு மெட்டு போட வெளிநாடுகளுக்கு டிக்கெட் போட சொல்லுவார். அதிக செலவு வைப்பார். 5 பாடல்களை வாங்க பல மாதங்கள் ஆகும் என சொல்பவர்கள் ஏராளம்.

அதனால்தான், பெரும்பாலான பெரிய இயக்குனர்கள் யுவன் சங்கர் ராஜா பக்கம் செல்வது இல்லை. வெங்கட்பிரபு உள்ளிட்ட சில இயக்குனர்கள் மட்டுமே அவரிடம் போகிறார்கள். ஒருபக்கம், அனிருத்தும் முன்னணி இசையமைப்பாளராக மாறிவிட்டார். வேட்டையன், ஜெயிலர், லியோ, இந்தியன் 2 என எல்லா பெரிய படங்களுக்கும் அவர்தான் இசையமைத்து வருகிறார்.

வெங்கட்பிரபு இயக்குனர் என்பதல் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மொக்கையான டியூன்களை போட்டு ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் ரசிகர்களை கவரவே இல்லை.

விஜய் ரசிகர்கள் பலரும் யுவனை சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்தார்கள். இதனால், யுவன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே டெலிட் செய்தார். அடுத்து வெளிவந்த பாடலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஒருபக்கம், யுவனின் அப்பா இளையராஜாவும் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய யுவன் சங்கர் ராஜா ’என் தந்தை மீது வைக்கப்படும் விமர்சனங்களை என்னை புண்படுத்துவது இல்லை. அதேபோல், என்னுடைய பாடல் ஒருவருக்கு பிடிக்கவில்லை எனில் அதில் சொல்லப்படும் கருத்துக்களை படித்துவிட்டு முன்னோக்கி போவேன்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story