அஜித் என் வீட்டுக்கே வந்து கேட்டார்!. என் வாழ்க்கையே மாறிடிச்சி!.. உருகும் யுவன்...

Yuvan shankar raja: இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. இளையராஜா பீக்கில் இருந்தபோது ரோஜா, ஜென்டில்மேன், காதலன் என ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏறி வந்தார். அவரின் இசை இளசுகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ரஹ்மானின் வெஸ்டர்ன் இசையில் ரசிகர்கள் மயங்கிப்போனார்கள்.
அப்போது யுவன் சங்கர் ராஜாவின் நண்பர்கள் ‘இனிமேல் உங்க அப்பாலாம் இல்ல. ரஹ்மான் வந்துட்டாரு’ என சொல்ல, விமானியாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்த யுவன் நாமும் இசையமைப்பாளராக வேண்டும். நமது அப்பாவோடு இசை நின்று விடக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார். இதை அவரே பல பேட்டிகளிலும் சொல்லி இருக்கிறார்.
ரஹ்மானை போலவும் யுவனும் மிகவும் சிறு வயதிலேயே சினிமாவில் இசையமைக்க வந்தார். துவக்கத்தில் சில ஹிட் பாடல்களை கொடுத்தார். யுவனை பொறுத்தவரை திடீரென ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமாவார். அதன்பின், சில வருடங்கள் களத்திலேயே இருக்க மாட்டார். முன் பனியா முதல் மழையா, நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி அருகில் வருவேன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், பறவையே எங்கு இருக்கிறாய் போன்ற மறக்க முடியாத மனதை மயக்கும் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
ஆனால், யுவனிடம் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவெனில் அப்பாவை போல வேகமாகவும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்ய மாட்டார். கொஞ்சம் சோம்பேறி. ஒரு பாடலுக்கு 3 மாதம் கூட எடுத்துக்கொள்வர். துபாயில் நட்சத்திர ஹோட்டலில் ரூம் போடுங்கள். அங்குதான் எனக்கு மெட்டு வரும் என்பார். அதனால்தான் அவரின் பக்கம் பல இசையமைப்பாளர்கள் போவதில்லை என சொல்லப்படுகிறது.
பல வருடங்கள் கழித்து விஜயின் கோட் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு காரணம் வெங்கட்பிரபு மட்டுமே. அஜித்தின் முக்கியமான கம்பேக் படங்களின் வெற்றிக்கு காரணமாக யுவன் இருந்திருக்கிறார். பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் யுவன் போட்ட தீம் மியூசிக் அஜித் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய யுவன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நல்ல இசையை கொடுத்தேன். ஆனால், படம் சரியாக போகவில்லை. என்னை ராசியில்லாத இசையமைப்பாளர்கள் என சொன்னார்கள். அப்போதுதான் அஜித் எனது வீட்டிற்கு வந்து ’தீனா படத்துகு நீதான் இசையமைக்க வேண்டும்’ என கேட்டார். அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி எனக்கு வரிசையாக வாய்ப்புகள் வர துவங்கியது’ என சொல்லி இருக்கிறார்.