என்னையாடா கலாய்க்குறீங்க!.. கோட் படத்தில் இறங்கி சம்பவம் செய்த யுவன் சங்கர் ராஜா!...
இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடம் பிரபலமாக துவங்கிய நேரத்தில் ‘இனிமேல் உன் அப்பா அவ்வளவுதான்’ என நண்பர்கள் கமெண்ட் அடித்ததால் அப்பாவுக்கு வரிசாக நாம் இசையமைக்க வேண்டும் என நினைத்து சினிமாவுக்கு வந்தார்.
அப்படி முதல் படமான அரவிந்தன் படத்தில் அற்புதமான இசையை கொடுத்து ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். அதன்பின் தொடர்ந்து பல இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் இவரின் பின்னணி இசை ரசிகர்களால் சிலாகித்து பேசப்பட்டது.
குறிப்பாக மங்காத்தா, பில்லா படத்தில் தீம் மியூசிக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல வருடங்களுக்கு பின் விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதுவரை இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், 3 பாடல்களுமே ரசிகர்களை கவரவில்லை.
அந்த 3 வீடியோக்களுமே யுடியூப்பில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த பாடல்கள் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. ‘விசில் போடு’ பாடல் வெளியான போது விஜய் ரசிகர்கள் யுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போய் திட்டியதால் அந்த அக்கவுண்ட்டயே தற்காலிகமாக நீக்கிவிட்டு போய்விட்டார்.
மேலும் ‘விஜய்க்கு அனிருத்தே சரி. யுவன் சரியில்லை’ என விஜய் ரசிகர்களும் சொல்லியதால் யுவன் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், கோட் படத்தின் பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறாராம் யுவன். ஒவ்வொரு காட்சியிலும் பார்த்து பார்த்து இசையமைத்திருக்கிறாராம்.
எனவே, பாடல்கள் வரவேற்பை பெறவில்லை என்றாலும் பின்னணி இசையில் யுவன் ஸ்கோர் செய்திருக்கிறார் என சொல்கிறது கோட் படக்குழு. இது நடக்குமா என்பது செப்டம்பர் 5ம் தேதி தெரிந்துவிடும்.