விஜய் கேட்டதால்தான் அந்த பாடல்! இல்லைனா எப்படி இருக்கும் தெரியுமா? யுவன் சொன்ன சீக்ரெட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:36  )

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஏனெனில் அதற்கு முன் வெங்கட் பிரபு கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள் தான்.

ஒரு பக்கம் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்து சிம்புவை வைத்து மாநாடு என்ற மாபெரும் வெற்றி படத்தையும் கொடுத்தவர் என்பதால் விஜயை வைத்து ஒரு தரமான படத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் இருந்து வந்தது.

அந்த எதிர்பார்ப்பை கோட் திரைப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்றால் கண்டிப்பாக ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கோட் திரைப்படம் மிகப் பெரிய அளவு வரவேற்பை பெற்றது. அந்த அளவுக்கு ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட திரைப்படமாக கோட் திரைப்படம் அமைந்திருந்தது.

ஆரம்பத்தில் படத்தில் அமைந்த பாடல்களுக்கு எந்த வித ஹைப்பும் இல்லாத நிலையில் படம் ரிலீஸ் ஆன பிறகு கோட் திரைப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மக்கள் மனதில் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மட்ட பாடல். திரிஷா அந்த பாடலில் மஞ்சள் நிற புடவை அணிந்து விஜய்யுடன் டான்ஸ் ஆடியது அனைவருக்கும் ஒரு உற்சாகத்தை தந்தது.

15 வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து ஆடிய கில்லி பட பாடலைப் போலவே இந்த பாடலும் ரசிகர்களை திருப்தி படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இதைப் பற்றி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது ஒரு பேட்டியில் கூறும்போது அந்தப் பாடலுக்கு முன்பு வேறு இரண்டு பாடல்களைத்தான் யுவன் சங்கர் பதிவு செய்து வைத்திருந்தாராம்.

ஆனால் விஜய் இந்தப் பாடல் யுவனுக்கு பிடித்ததை போல யுவனின் ஸ்டைலில் இருக்கும் பாடலாக அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டாராம் விஜய் அதனாலேயே அந்த இரு பாடல்களை தவிர்த்து இந்த மட்டப் பாடலை போட்டதாக யுவன் சங்கர் ராஜா கூறியிருக்கிறார்.

Next Story