நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது!.. வேட்டையன் பட விழாவில் தெறிக்கவிட்ட ரஜினி...

சினிமாவுக்கு வந்து 50 வருசம் ஆகப்போகுது. ஒன்னுமே தெரியாம ரயில் ஏறி இங்கே வந்தேன் நீங்க கொடுத்த ஆதரவால்தான் இங்க இருக்கேன். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு ஏற்ற இயக்குனர்கள் இல்லை. ஒரு வெற்றிக்கு பின் அடுத்த வெற்றியை கொடுப்பதை விட தோல்விக்கு பின் வெற்றிப்படம் கொடுப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கு.

சௌந்தர்யா ஞானவேல் ஒரு லைன் சொன்னதாக சொன்னார். நான் ‘நீங்க மெசேஜ் சொல்லுவீங்க. நமக்கு அது செட் ஆகாது. மக்கள் கொண்டாடுற மாதிரி கமர்ஷியலா இருக்கணும்னு சொன்னேன். 10 நாள் டைம் கேட்டார். ஆனால், 2 நாட்களில் போன் பன்னார். நான் கமர்ஷியலா பண்றேன். ஆனால், நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாமல் ரசிகர்கள் உங்களை பார்க்கும் வேறொரு கண்ணோட்டத்தில் காட்டுறேன்னு சொன்னார். அப்போ அதுதான் வேணும். அது வேணும்னா நான் நெல்சன், லோகேஷ்கிட்டையே போயிருப்பேன்னு சொன்னேன்.

சகுனிங்களா இருக்க இந்த உலகத்துல யோக்கியவனா இருந்தா பிழைக்க முடியாது. சாணக்கியத்தனமும் இருக்கணும். சமார்த்தியமும் இருக்கணும். ஞானவேல்கிட்ட இது இரண்டும் இருக்கு. மிகவும் சிறப்பாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நான் மன்னன் பட ஷூட்டிங்கில் இருந்தபோது குழந்தையாக இருந்த அனிருத்தை சிம்மாசனத்தில் வச்சி போட்டோ எடுத்தேன்.



இன்னைக்கு அந்த அனிருத் இசை சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். இன்னைக்கு அவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு உடனே டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுகிறது. இந்த படத்திற்கு 100 சதவீதம் அனிருத் வேணும்னு ஞானவேல் சொன்னார். நான் 1000 சதவீதம் அனிருத்தான் வேணும்னு சொன்னேன். சிறப்பான இசையை அவர் கொடுத்திருக்கிறார்.

சம்பளமே வேணாம்னு சொல்லி இந்த படத்தில் நடிக்க வந்தார் பஹத் பாசில். ஆனால், அவரிடம் கால்ஷீட் இல்லை. அவருக்காக காத்திருப்பதில் தப்பு இல்லை. ஆனால், லோகேஷ் எனக்காக காத்துக்கிட்டு இருக்கார். லோகேஷிடம் ‘கூலி படத்தோட ஷூட்டிங் தள்ளி வச்சிக்கலாமான்னு கேட்டேன். ‘சார் ப்ளீஸ்’ என்றார். அப்போதான் தெரிஞ்சது அவர் இன்னும் கதையே பண்னலன்னு என சிரித்தார் ரஜினி.


Admin
Admin  
Related Articles
Next Story
Share it