மும்தாஜிக்கு இப்படி ஒரு நோயா?!.. இதனால்தான் சினிமாவில் நடிப்பதில்லையா?!...

by Murugan |   ( Updated:2024-12-06 16:30:03  )
mumtaj
X

mumtaj

Mumtaj: மும்பையை சேர்ந்தவர் மும்தாஜ். சினிமாவில் கவர்ச்சி காட்டி பிரபலமானவர் இவர். டி.ராஜேந்தர் தான் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்கிற படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

எனவே, சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். அப்படி நடித்து வந்த போதுதான் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விஜய் நடித்து வெளிவந்த குஷி படத்தில் இவருக்கு நல்ல வாய்ப்பு வந்தது. கவர்ச்சி காட்டும் காலேஜ் கேர்ள் வேடம். மேலும், அந்த படத்தில் இவருக்கும் விஜய்க்கும் இடம் பெற்ற 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடல் இளசுகள் முதல் பெரிசுகள் வரை சூடேற்றியது.

அந்த பாடலின் வெற்றி மும்தாஜுக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தில் இடம் பெற்ற 'மலமல மருதமல' பாடலும் மும்தாஜிக்கு ஒரு ஹிட் பாடலாக அமைந்தது. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

வீராசாமி படத்தில் டி.ஆருக்கு ஜோடி போட்டு நடித்தார். 2015ம் வருடம் வெளிவந்த டாமி என்கிற தெலுங்கு படம்தான் மும்தாஜ் கடைசியாக நடித்த படம். கடந்த 9 வருடங்களாக மும்தாஜ் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இடையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 2-வில் மட்டும் கலந்து கொண்டார். அப்போது பல சோக கதைகளை சொன்னார். 91 நாட்கள் அந்த வீட்டில் இருந்துவிட்டு எவிக்‌ஷன் ஆனார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘நான் கவர்ச்சி உடைகளை அணிந்து நடனமாடி பெரிய தவறு செய்துவிட்டேன். இப்போது மனசாட்சி உறுத்துகிறது. தினமும் வீட்டில் இதற்காக அழுது கொண்டிருக்கிறேன். இப்போது அல்லாவை தவிர எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. என் கையில் மட்டும் நிறைய பணம் இருந்தால் நான் நடித்த எல்லா படங்களின் உரிமையையும் வாங்கி அதில் இருக்கும் என் கவர்ச்சி காட்சிகளை நீக்கிவிடுவேன்.

mumtaj

கூகுளில் இருந்து என் கவர்ச்சி புகைப்படங்களை அழிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என்னால் அது முடியாது. எனக்கு இனிமேல் திருமணமாகும் என்கிற நம்பிக்கையெல்லாம் இல்லை. நடந்தால் பார்ப்போம். அது அல்லாவின் ஆணை. ரசிகர்கள் தயவுசெய்து என் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பரப்ப வேண்டாம்’ என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

மேலும், Auto Immunity decease என சொல்லப்படும் தன்னுடல் தாக்குமை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவரின் இரத்த உயிரணுக்கள் நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், இதனால் நான் தனிமையில் வாழ முடிவு செய்துவிட்டேன் என சொல்லி இருக்கிறேன். மேலும், கவர்ச்சி காட்டி நடித்து நான் செய்த பாவங்களை கழிப்பதற்காக கடவுளே தேடி அலைகிறேன் எனவும் சொல்லியிருக்கிறார். இப்போதெல்லாம் புர்கா இல்லாமல் மும்தாஜ் வெளியே வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story