லைக்கா வெளியிட்ட ஒத்த போஸ்ட்.. பொங்கலுக்கு பிச்சிட்டு குவியும் படங்கள்.. மொத்தம் 10-தாமே!..
இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பண்டிகை தினங்களில் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் அல்லது வளர்ந்து வரும் நடிகர்கள் நடித்திருக்கும் படங்கள் அனைத்துமே பின்வாங்கிவிடும். ஏனென்றால் மக்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களுக்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அது மட்டுமில்லாமல் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு அதிக அளவு திரையரங்குகள் ஒதுக்கப்படும் என பல காரணங்கள் இருக்கின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிறது என்கின்ற காரணத்தால் பல திரைப்படங்கள் பொங்கல் ரேசிலிருந்து ஒதுங்கி இருந்தார்கள்.
நேற்று முன்தினம் லைக்கா நிறுவனம் வெளியிட்ட ஒரே ஒரு போஸ்டரால் நேற்று மற்றும் இன்று இரண்டு தினங்களில் ஏகப்பட்ட திரைப்படங்கள் பொங்கல் ரிலீஸ்க்கு முன் வந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றன. அந்த படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.
1. காதலிக்க நேரமில்லை: ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகிறது.
2. படைத்தலைவன் : விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் படைத்தலைவன். இந்த படம் ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
3. மெட்ராஸ்காரன் : கலையரசன், ஷேன் நிகம், ஐஷ்வர்யா தத்தா, நிஹரிக்கா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெட்ராஸ்காரன். இந்த திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
4. தருணம்: அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ், ஸ்முருதி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தருணம். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகின்றது.
5. நேசிப்பாயா: இயக்குனர் விஷ்ணுவர்தன் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் இயக்கியிருக்கும் திரைப்படம் நேசிப்பாயா. முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும் அதிதி சங்கரும் நடித்திருக்கும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
6. சுமோ: பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் திரைப்படம் சுமோ. நடிகர் சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.
7. டென் ஹேண்ட்ஸ்: இயக்குனர் கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டென் ஹேண்ட்ஸ். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
8. 2கே லவ் ஸ்டோரி: இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஜாவீர், மீனாட்சி, பாலசரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் டிசம்பர் மாதமே வெளியாக வேண்டி இருந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றது.
9. வணங்கான்: இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.
10. கேம் சேஞ்சர்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று பல நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.