19 வயதில் முதல் ஆடிஷன்!.. எப்படி இருக்காங்க பாருங்க நம்ம நேஷனல் க்ரஷ்?.. வைரல் வீடியோ!..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர் 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்தது. குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். பின்னர் தெலுங்கில் டியர் காம்ரேட், புஷ்பா, சீதாராம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழில் சுல்தான் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ராஷ்மிகாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது.
குட்பாய் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹிந்தியில் கால்பதித்த ராஷ்மிகா அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான அனிமல் என்கின்ற திரைப்படத்தில் ரன்பீர் கப்ருக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் 1000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் வெளியாகி நாடு முழுவதும் சக்க போடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார்.
இந்த திரைப்படம் நாடு முழுவதும் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்து வருகின்றது. இதனை தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது சமூக வலைதள பக்கங்களில் அவரின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அதாவது நடிக்க வருவதற்கு முன்பு 19 வயதில் முதன் முறையாக ஆடிஷனில் பங்கேற்ற வீடியோ தான் அது. சிவப்பு நிற குர்த்தா அணிந்திருக்கும் ராஷ்மிகா அந்த வீடியோவில் 'ஹாய் என் பெயர் ராஷ்மிகா. வயது ௧௯, பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றேன். இதுதான் எனது முதல் ஆடிஷன் என்று மிகவும் க்யூட்டாக பேசுகின்றார். அவரிடம் கன்னடத்தில் பேசுமாறு கூற கன்னடத்தில் ஏதோ பேசுவதற்கு முயற்சி செய்கின்றார்.
பின்னர் என்னால் பேச முடியவில்லை நடிக்க முடியவில்லை' என்று கூறுகின்றார். அந்த வீடியோ கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆடிஷனில் பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இது. அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆடிஷன்களில் பங்கேற்ற ரஷ்மிகா கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.