2024ன் டாப் 10 த்ரில்லர் படங்கள் என்னென்னன்னு தெரியுமா? இதோ லிஸ்ட்..!

by Sankaran |   ( Updated:2024-12-11 16:30:15  )
2024 thriller tamil movies
X

2024ல் வெளியான பயங்கரமான திரில்லர் மற்றும் டுவிஸ்ட்டுடன் கூடிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 10வது இடத்தில் இருந்து ஒன்றாவது இடத்திற்கு வரும் வகையில் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் விவரம் இதோ.

ஜமா - பேச்சி

10வது இடத்தில் இடம்பெற்றுள்ள படம் ஜமா. மலையாள திரையுலக பாணியில் தமிழில் எடுக்கப்பட்ட படம். ஆனால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதேபோல பேச்சி படத்தில் வழக்கம்போல காட்டுக்குள்ள நாலு பேர் போறாங்க. அங்கு நடக்குற அமானுஷ்யங்கள் தான் படம். கிளைமாக்ஸ்ல யாருமே யூகிக்க முடியாத படம்.

அந்தகன்

பிரசாந்த் நடித்த த்ரில்லர் படம். இது இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக். பிரசாந்துக்கு நல்ல கம்பேக்கான படம். ரொம்ப நாளா தயாரிப்பில் இருந்து காலதாமதமாக வெளியானது. தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

கடைசி உலகப்போர் - நந்தன்

nandhan

nandhan

'ஹிப் ஹாப்' தமிழா ஆதி நடித்த படம். ஒவ்வொரு கேரக்டர்களும் அழகாக சொல்லப்பட்டு இருக்கும். மனிதாபிமானம் என்ற ஒன்றை வைத்து ஹீரோ செய்யும் கமர்ஷியல் கதைதான் இந்தப் படம். நந்தன் படம் ஒரு பொலிடிகல் டிராமா. சசிகுமார் தான் ஹீரோ. சாதிக்கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படம். கிளைமாக்ஸ் அபாரமாக உள்ளது.

சட்டம் என் கையில்

சதீஷ் நடித்த கிரைம் திரில்லர் டிராமா. சேலம் ஏற்காட்டில் நடந்த உண்மைச்சம்பவம். கார் விபத்து, கதையின் நாயகன் குடித்துவிட்டு போலீஸிடம் சிக்கி விடுகிறான். தப்பிக்கும் நேரத்தில் ஒரு போலீஸே பழிக்குப் பழி வாங்க நினைக்கிறார். அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் தான் படம். சதீஷ் காமெடியனாக இருந்து ஹீரோவான படம்.

ஆரகன்

கதையின் நாயகன் தனது இளமைப் பருவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல காலமாக அவர் செய்யும் மந்திர தந்திரங்கள் என்ன என்பது தான் படம். தன் வசியத்தால் ஒரு பெண்ணை மயக்கி வீட்டுக்குள் கொண்டு போய் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை.

அதர்மக்கதைகள்

மனிதாபிமானம், சட்டத்தைக் கையில் எடுத்து கொலை செய்வது போன்ற சம்பவங்களைக் கொண்ட படம். வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை காமராஜ் வேல் இயக்கியுள்ளார்.

ப்ளடி பெக்கர்

சோத்துக்கே கஷ்டப்படுற பிச்சைக்காரன் சொத்துக்காக அடிச்சிக்கிற அண்ணன் தம்பி இருக்குற பங்களாவுல போய் மாட்டிக் கொள்கிறான். உயிரோடு திரும்பினானா என்பதுதான் கதை. நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த படம். இது ஒரு டார்க் ஹியூமர் காமெடி படம். சிவபாலன் இயக்கியுள்ளார்.

பிளாக்

black

black

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம். இது ஹாலிவுட்ல உள்ள சயின்ஸ் பிக்சர் த்ரில்லர் படத்தோட ரீமேக். வேட்டையன் படம் வந்த நேரத்தில் வந்ததால் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.

கொட்டுக்காளி - வாழை

சூரிக்காக இந்தப் படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணலாம். பிலிம் பெஸ்டிவல்ல கலந்துக்கறதுக்காக எடுக்கப்பட்ட படம் கொட்டுக்காளி. வாழை... இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை.

படத்தில் பெரிய அளவிலான நடிகர், நடிகைகள் இல்லை என்றாலும் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற படம். மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

Next Story