சண்டைன்னா சட்ட கிழியதானே செய்யும்!.. 2024 ஆம் ஆண்டு செலிபிரட்டிகளின் சண்டைகள்..

by Murugan |   ( Updated:2024-12-29 12:00:51  )
2024 controversy
X

2024 controversy

2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் சமூக வலைதள பக்கங்களில் சண்டை போட்டிருக்கிறார்கள். திரைப்படங்களை காட்டிலும் இவர்கள் போடும் சண்டைகள் தான் அதிக அளவில் பேசப்பட்டது. அப்படி இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் சண்டை குறித்த தகவலை தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

நயன்தாரா-தனுஷ்: தமிழ் சினிமாவில் நயன்தாரா, தனுஷ் இருவருமே மிகப் பிரபலமான நடிகர்கள். கடந்த நவம்பர் மாதம் நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் 3 பக்கத்திற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் பக்கத்திற்கு பக்கம் நடிகர் தனுஷை காட்டமாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். நடிகை நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காட்சிகள் பயன்படுத்தப்பட்டதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக கூறி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.


இந்த விவகாரம் சமூக வலைதள பக்கங்களில் பூதாகரமாக வெடித்தது.தொடர்ந்து பலரும் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், பலர் தனுஷுக்கு ஆதரவாக பேசி வந்தார்கள். இது தொடர்பாக நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் நீதிமன்றத்தில் நயன்தாரா சார்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நயன்தாரா-வலைப்பேச்சு: இந்த வருடத்தின் பிற்பகுதியில் பல விஷயங்களில் தேவையில்லாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டவர் நடிகை நயன்தாரா தான். சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நயன்தாரா வலைப்பேச்சு யூடியூப் சேனலில் இருக்கும் சினிமா விமர்சகர்களான பிஸ்மி, அந்தணன், சக்தி ஆகியோரை குரங்கு என்று விமர்சித்தது.


நயன்தாரா மூலம் தான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது போல் பேசியிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் நயன்தாரா பாடி ஷேமிங் செய்ததாக பலரும் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்தார்கள். நயன்தாராவின் கருத்துக்கு வலைப்பேச்சு குழுவினரும் சேனல் சேனலாக சென்று நயன்தாராவை கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள்.

அமீர் ஞானவேல்: அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை வெடித்தது. பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்லை. பருத்திவீரன் படத்தில் தனது பணத்தை மோசடி செய்து விட்டதாக ஞானவேல் ராஜா தேவையில்லாத வார்த்தைகளை விட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதனால் அமீருக்கு நெருக்கமானவர்கள் பலரும் கொந்தளிக்க பின்னர் சரண்டர் ஆகி விட்டார் ஞானவேல் ராஜா.

இளையராஜா வைரமுத்து: வரிகள் பெருசா? இல்ல பாட்டு பெருசா? என்று நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி வருகின்றார் என்றும், ஒரு பாடல் ரசிகர்களிடையே போய் சேருவது வெறும் இசையால் மட்டும் கிடையாது அதன் வரிகளால் தான் என்றும் அவர் கூறியிருந்தார்.


இதனை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் இளையராஜா மற்றும் வைரமுத்து ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் சண்டை போட தொடங்கினார்கள். அதிலும் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் வைரமுத்துவை மிகக் கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

மணிமேகலை பிரியங்கா: குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் பிரியங்காவின் பெயரை குறிப்பிடாமல் எனது வேலையில் வேறு சில தொகுப்பாளர்களின் குறுக்கீடு அதிகமாக இருந்ததாலும் மரியாதை இல்லாத இடத்தில் தான் இருக்க விரும்பவில்லை என்று அவர் கூறியிருந்தார். இருப்பினும் அவர் பிரியங்காவை தான் கூறுகிறார் என்பது பலருக்கும் தெரிய வந்தது. பின்னர் சமூக வலைதள பக்கங்களில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தார்கள்.


சுசித்ரா கார்த்திக்குமார்: சர்ச்சையான விஷயங்களை பேசி எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் பாடகி சுசித்ரா தான். இந்த வருடமும் தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் ஒரு தன் பாலினை ஈர்ப்பாளர் என்று கூறியதும், அவரும் நடிகர் தனுஷும் ஒரே அறையில் நீண்ட நேரம் தனியாக இருந்தார்கள் என்றெல்லாம் கூறி சோசியல் மீடியாவை அதிரவிட்டார் சுசித்ரா.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கருத்து சொல்கின்றேன் என்கின்ற பெயரில் சர்ச்சையான விஷயங்களை மட்டுமே பேசி வந்தார் பாடகி சுசித்ரா.

Next Story