
Cinema News
Hariskalyan: தீபாவளி ரேஸுக்கு தயாராகும் படங்கள்! அஜித் மாதிரி ஹிட்டடிப்பாரா ஹரீஷ்கல்யாண்
Hariskalyan:
இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். தீபாவளி மட்டுமல்ல ஒவ்வொரு பண்டிகையின் போதும் அந்த பண்டிகையை ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ அந்த நாளில் புதுப்படங்கள் ஏதாவது ரிலீஸ் ஆகுமா? தியேட்டரில் போய் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணலாம் என்றுதான் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் தோன்றும்.
அதிலும் குறிப்பாக தீபாவளி பொங்கல் என்றாலே ஒரு தனி குதூகலம் தான். மற்ற பண்டிகைகளை விட தீபாவளி பொங்கல் பண்டிகையின் போது தான் அதிக விடுமுறை நாட்கள் கிடைக்கும் என்பதனால் அந்த விடுமுறை நாட்களை படத்தை பார்த்து அந்த நாளை கழித்து விட வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஒவ்வொருவரும் நினைப்பார்கள். அந்த வகையில் இந்த வருட தீபாவளி அன்று இதுவரைக்கும் மூன்று திரைப்படங்கள் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்திருக்கின்றது.
அதிலும் குறிப்பாக முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அது ஒரு தனி கொண்டாட்டம் தான். அஜித் ,விஜய், ரஜினி இவர்களின் படங்கள் தீபாவளி ரேஸில் குதிக்கிறது என்றாலே எங்கெல்லாமோ இருந்து ரசிகர்கள் வந்து விடுவார்கள். அதுவும் வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த கொண்டாட்டத்தை காண சென்னைக்கு ரசிகர்கள் வந்து விடுவார்கள்.
பைசன்:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் லால், பசுபதி ,ஹரிகிருஷ்ணன் என முக்கியமான நடிகர்கள் நடித்துள்ளனர் .படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார் .படத்தின் போஸ்டர் பாடல் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் துருவ் விக்ரம் ஈடுபட்டு வருகிறார். ரசிகர்களை சந்தித்து அவருடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.
டூட்:
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டூட். இந்த படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்., மேலும் இவர்களுடன் இணைந்து சரத்குமார், ரோகிணி ,ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் .இந்தப் படமும் அக்டோபர் 17 ஆம் தேதி அன்று தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. சில வாரங்கள் கழித்து இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
டீசல்:
அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டீசல். இந்த படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் ஒரு ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார் .படத்தின் ஆருயிரே என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. பார்க்கிங், லப்பர் பந்து என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ஹரிஷ் கல்யாண் அடுத்து ஒரு ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.
இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். படத்திற்கு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படமும் அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது .அஜித்திற்கு எப்படி தீனா படம் ஒரு பெரிய ஆக்சன் படமாகவும் அதன் பிறகு அவர் ஒரு முழு நீள ஆக்சன் ஹீரோவாகவும் எப்படி மாறினாரோ அப்படி டீசல் திரைப்படமும் ஹரிஷ் கல்யாணுக்கு இருக்கும் என கோடம்பாக்கத்தில் கூறி வருகின்றனர்.

அந்த மாதிரி ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இந்த படம் உருவாகி இருக்கிறதாம். மேலும் ஹரிஷ் கல்யாணை இதற்கு முன்பு வேறு எந்த படங்களிலும் பார்க்காத வகையில் இந்த படத்தில் பார்ப்பீர்கள் என்றும் கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.