1. Home
  2. Cinema News

ஜனநாயகனோடு மோதும் 5 திரைப்படங்கள்.. பொங்கல் சும்மா களைகட்ட போகுது….

ஜனநாயகனோடு மோதும் 5 திரைப்படங்கள்.. பொங்கல் சும்மா களைகட்ட போகுது….

2026 Pongal Release: பொதுவாக தீபாவளி பொங்கல் என்றாலே புது திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். 80களில் தீபாவளி, பொங்கலுக்கு ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன் போன்ற எல்லா நடிகர்களின் படங்களும் வெளியாகி தியேட்டர்களை திருவிழா போல் இருக்கும். ஆனால் தற்போதல்லாம் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களை எப்போதாவதுதான் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகிறது.

அதோடு ஒரு பெரிய நடிகரின் படம் வந்தால் மற்ற சின்ன படங்கள் அந்த தேதியில் வெளியாவது இல்லை. ஏனெனில் அதிக தியேட்டர்கள் கிடைக்காது என்பது முக்கிய காரணம். 2026 பொங்கலை பொறுத்தவரை ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள ஜனநாயகன் படம் எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு செல்வதாக அறிவித்துவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படம் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

ஜனநாயகனோடு மோதும் 5 திரைப்படங்கள்.. பொங்கல் சும்மா களைகட்ட போகுது….
#image_title

அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள பராசக்தி திரைப்படமும் பொங்கலை குறி வைத்திருக்கிறது. இது 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை. அடுத்து பா.ரஞ்சித்தின் வெட்டுவம் திரைப்படமும் பொங்கலுக்கு வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, கெத்து தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

மேலும் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படமும் பொங்கலை குறி வைத்திருக்கிறது. கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்து. இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜனநாயகனோடு மோதும் 5 திரைப்படங்கள்.. பொங்கல் சும்மா களைகட்ட போகுது….
#image_title

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் திரைப்படமும் பொங்கலுக்குவருவதாக சொல்லப்படுகிறது. வித்தியாசமான சினிமா எடுப்பவர் மிஷ்கின். எனவே இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 7ஜி ரெயின்போ காலனி 2 படமும் பொங்கலுக்கு வருகிறது.

இப்படத்தின் முதல் பாகம் 2004 ஆம் வருடம் வெளியான நிலையில் 20 வருடங்கள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த ரவி கிருஷ்ணாவே ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கிறது.

இது இப்போதைய நிலவரம்தான் என்றாலும் பொங்கல் நெருங்கும்போது இதிலிருந்து சில படங்கள் விலகவும் வாய்ப்பிருக்கிறது. எது எப்படி என்றாலும் ஜனநாயகனும், பராசக்தியும் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என்றே சொல்லப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.