7ஜி ரெயின்போ காலனி 2 பட ஹீரோயின் இவரா? அட பாக்கவே செமையா இருக்குமே!

7G Rainbow Colony: தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்ற 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
2004ம் ஆண்டு வெளியான 7G ரெயின்போ காலனி, தமிழ் சினிமாவில் காதலை, வேதனையை உண்மையாக சொல்லிக் காட்டிய மைல்கல்லான திரைப்படம். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். அவருடன், சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்தார்.
கதிர் என்ற ஹீரோ கேரக்டர் கூட ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. கலகலவென தொடங்கும் படம் கிளைமேக்ஸ் நெருங்கும் போது பலருக்கு ஆட்டம் கண்டுவிடும் அளவு அமைந்து இருக்கும்.
இப்படத்தில் செல்வராகவனின் திரைக்கதை ஒரு பெரிய பிளஸாக அமைந்தது. அதுபோலவே யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் படு வரவேற்பை பெற்றது. மேலும், இன்றளவும் பாடல்கள் பெரிய அளவு பலரிடத்திலும் சூப்பர் ஹிட்டாகவே அமைந்து இருக்கிறது.
3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் விநியோகிஸ்தர்களுக்கே 10 கோடி லாபம் பெற்று தந்தது. இப்படத்திற்காக முதல் படத்திலேயே ஹீரோ ரவி கிருஷ்ணா பிலிம்பேர் விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் யுவன் ஷங்கர் ராஜாவும் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்.

இப்படத்தில் ஹீரோயின் அனிதா கிளைமேக்ஸில் இறந்து விடுவார். கதிர் அவர் இருப்பது போல பேசிக்கொண்டு இருந்து வாழ்ந்து வருவார். 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி வசூல் சாதனையும் படைத்தது.
11 வருடங்கள் கழித்து இப்படம் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. ஹீரோ கதிரின் தொடர் வாழ்க்கையை தான் இப்படம் பேசும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்து இருந்தார். இதனால் கதிர் கேரக்டரில் தான் ரவி கிருஷ்ணா இப்படத்தில் நடிப்பார் என நம்பப்பட்டது.
இந்நிலையில் முதல் பாகத்தில் ஹீரோயின் சோனியா அகர்வால் ஏற்கனவே இறந்து விட்டதால் இந்த பாகத்தின் ஹீரோயின் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இதனை தொடர்ந்து அனஸ்வரா ராஜன் இப்படத்தின் ஹீரோயினாக களமிறங்க இருக்கிறார்.
இதற்கான படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து இருக்கிறது. குருவாயூர் அம்பலடத்தில், ரேகா சரித்திரம் உள்ளிட்ட படங்களில் அனஸ்வர ராஜன் நடித்திருந்தார். இதனால் தமிழில் அனஸ்வர ராஜன் நடிக்கும் பிரபல தமிழ் படம் இது என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.