இயக்குனரின் பிறந்தநாள் பார்ட்டியில் அசிங்கப்பட்ட அஜித்!.. கோபத்தில் சொன்ன அந்த வார்த்தை.

Ajithkumar: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித். ரஜினி - கமல் இருவரும் சீனியர் நடிகர்களாக மாறியதன் பின் விஜய் - அஜித் என கோலிவுட் மாறியது. விஜய்க்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருக்கிறார். விஜய் மற்றும் ரஜினி படங்களோடு போட்டி போடும் தைரியமும் அஜித்துக்கு இருக்கிறது.

பேட்டை படத்தோடு வெளியான விஸ்வாசமும், வாரிசு படத்தோடு வெளியான துணிவு படமும் நல்ல வசூலை பெற்றது. ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் அவருக்கு ரசிகர்கள் குறையவில்லை. திரையுலக வரலாற்றில் ஒரு நடிகர் ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னரும் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகராக இருப்பது அஜித் மட்டுமே என அடித்து சொல்லலாம்.

சினிமாவில் இந்த இடத்தை பிடிக்க அஜித்துக்கு 30 வருடங்கள் ஆகியிருக்கிறது. பல அவமானங்களை தாண்டி பின்னர்தான் அஜித் வெற்றிகளை கொடுக்க துவங்கினார். இன்னும் சொல்லப்போனால் வெற்றிகளை கொடுத்து பெரிய ஹீரோ ஆகவேண்டும் என்கிற வெறியை அஜித்துக்கு உண்டாக்கியதே அவர் சந்தித்த அவமானங்கள்தான்.

பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். அது எதையுமே அஜித் மறக்கவில்லை. அதேபோல், தன்னை அசிங்கப்படுத்தவர்களை பின்னாளில் தன் பின்னால் கால்ஷீட் கேட்டு அலையவிட்டார் என்பதே உண்மை. ஒருமுறை ஒரு பிரபலமான இயக்குனரின் பிறந்தாள் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு போயிருக்கிறார் அஜித்.

அவரை பார்த்த இயக்குனரின் உதவியாளர் அஜித்தை ஹாலில் உட்கார வைத்துவிட்டு ‘உள்ளே பார்ட்டி நடக்கிறது. டைரக்டர கூப்பிட்டு வரேன்’ என சொல்லிவிட்டு உள்ளே போயிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அவர் வரவில்லை. அதன்பின் வெளியே வந்த அவர் ‘சார் பிஸியா இருக்காருன்னு உங்ககிட்ட சொல்ல சொன்னாரு’ என சொல்ல, கொண்டு வந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்துவிட்டு ‘நான் வாழ்த்து சொன்னேன்னு சொல்லுங்க. எனக்கான நேரம் வரும்’ என கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் அஜித்.

சொன்னது போலவே அஜித் பெரிய நடிகராகவும் மாறினார். அதன்பின் அவரிடம் கால்ஷீட் கேட்டு அந்த இயக்குனர் பலமுறை அலைந்தாராம். ஆனால், அஜித் அவரை கண்டு கொள்ளவே இல்லை. இந்த தகவலை ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி ஊடகம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட அனுபவங்களால்தான் அஜித் திரையுலகில் இருந்து விலகியே இருக்கிறாரோ என்னவோ!..

Related Articles
Next Story
Share it