விஜய்க்கு அரசியல்! அஜித்துக்கு கார் ரேஸ்! ரஜினிக்கு ‘ரெஸ்ட்’.. அப்ப தமிழ் சினிமாவோட நிலைமை?
தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகராக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். அதாவது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ஆகவும், அவர்களின் திரைப்படங்களை இளைஞர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். நடிகர் விஜய் தமிழில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகின்றார். இவரின் திரைப்படம் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இவர் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் 420 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதைத் தொடர்ந்து ஹச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடிக்கப் போகின்றார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தை முடித்துக் கொண்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனால் இவர் அடுத்து திரைப்படத்தில் நடிப்பாரா? என்பது சந்தேகம் தான். இதையடுத்து நடிகர் அஜித் என்னதான் சினிமாவில் நடித்து வந்தாலும் அதிக அளவு கார் மற்றும் பைக் ரேஸ்களில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
சமீப நாட்களாக பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவது அதுமட்டுமில்லாமல் தற்போது கார் ரேஸில் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படி கார் மற்றும் பைக் ரேஸ்க்காக சினிமாவையும் தள்ளி வைப்பதற்கு ரெடியாக இருக்கின்றார். வருடத்திற்கு அவரின் ஒரு படம் வந்தாலே அதிசயம் தான் என்ற அளவிற்கு மாறிவிட்டது. இப்படி இருக்க நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் 73 வயதை தாண்டிய போதிலும் ஹீரோவாக நடித்த அசதி வருகின்றார்.
இளம் நடிகர்களுக்கு இணையாக சுறுசுறுப்பாக நடித்து வந்த அவருக்கு தற்போது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று இரவு உடல் நலகுறைவு ஏற்பட்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். தற்போது அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட வரும் நிலையில் நிச்சயம் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அருவருத்துவார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்பது சந்தேகம் தான். ஒரு வழியாக ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன்னால் கூலி திரைப்படத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை. இப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் அனைவரும் சினிமாவை விட்டு விலகிக் கொண்டே இருந்தால், தமிழ் சினிமாவின் நிலைமை என்ன தான் ஆகும் என்று பேட்டி ஒன்று வலைப்பேச்சு அந்தணன் பேசி இருக்கின்றார்.