kpy bala
kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா அதற்கான எந்தவித பதிலும் ஆதாரமும் வெளியிடவில்லை. அவர் செய்யும் உதவி எல்லாம் டுபாக்கூர். எல்லாமே பிராடு தான். போலி ஆம்புலன்ஸ் என அவர் செய்த உதவிகள் எல்லாமே நாடகம் தான் என்று பத்திரிக்கையாளர் உமாபதி அவர் மீது குற்றச்சாட்டை வைத்தார்.
இதற்கு பாலாவும் இன்னும் சரியான ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் சினிமா பிரபலம் ஆதவன் பாலா பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில்,”பாலா அடிப்படையில் நல்ல எண்ணம் கொண்டவர். ஆனால் அந்த நபர்மீது தவறு நடக்கும் போது அந்த நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். கடைசியில் மக்கள் அதற்கான முடிவை சொல்வார்கள்”.
”நான் முதலில் பாலாவை பற்றி பேசி பதிவை போட்ட பிறகு பாலாவிடம் நான் பேசினேன். சீக்கிரம் உன்னுடைய விளக்கத்தை கொடு என்று அவனிடம் கூறினேன். அவன் என்னிடம் நான்கு நாட்கள் time கேட்டார். அங்கதான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பாலா காமெடி நிகழ்ச்சியில் கண்ணிமைக்கும் நொடியில் கவுண்டர் பன்ச் கொடுப்பார்”.
”ஆனால் இதற்கு மட்டும் எப்படி நேரம் கேட்கிறார் என்று சந்தேகம் வந்தது. அந்த கேள்விக்குறிக்கு கண்டிப்பா பாலா பதில் சொல்லி ஆக வேண்டும். இதற்கு பதில் சொல்லிவிட்டால் அதோடு வேலை முடிந்தது. முதலில் பாலா ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து ஏன் பப்ளி சிட்டி செய்ய வேண்டும். அப்படி உதவி செய்தால் இன்னுல் ஏன் மெளனமாக இருக்கிறார்”.
”பாலா ஏதாவது பிரச்சனையில் சிக்க கூடாது. அவன் நல்லவன் இன்னும் நன்றாக வர வேண்டும் என்பதற்காக நானும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் பாலா நேரம் கடத்தாமல் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி அவர்கள் கேட்கும் கேள்விக்கு உண்மையான பதிலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை செய்யவில்லை என்றால் பாலா செய்த நல்ல காரியங்கள் எல்லாம் அடிபட்டு போகும்”. என்று கூறியுள்ளார்.
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…
தனுஷை வைத்து…