விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!.. ரெண்டு பேருக்கும் என்ன கனெக்‌ஷன்?..

by SARANYA |
விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!.. ரெண்டு பேருக்கும் என்ன கனெக்‌ஷன்?..
X

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால் ராட்சசன், முண்டாசுப்பட்டி, ஜீவா, நீற்ப்பறவை, ஃப்ஐஆர் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அவர் மூலம் கட்டா குஸ்தி போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.


ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்த விஷ்ணு விஷாலுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதை தொடர்ந்து அவர் இரண்டாவதாக பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை திருமணம் செய்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. அதில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்துக் கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகர் அமீர் கான் குழந்தைக்கு மிரா என்ற பெயரை சூட்டியுள்ளார். அந்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்துள்ள அமீர்கான் முன்னதாக வெள்ளத்தில் சிக்கும் போது கூட விஷ்ணு விஷால் உடன் தான் இருந்தார். அவரது வீட்டின் அருகே தான் தனது தாயை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்த அமீர்கான் தங்கி வருகிறார். இருவரும் நல்ல நண்பர்களாக மாறிய நிலையில், அமீர்கான் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார் என்கின்றனர்.

ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் இரண்டு உலகம் என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளார். மேலும், வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹாட் ஸ்பாட் 2 மற்றும் கட்டா குஸ்தி 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இயக்குனர் வசந்த பாலனுடன் ஒரு புதிய படத்தில் பணியாற்றி வருகிறார் விஷ்ணு விஷால்.

நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பில் தன் தம்பி ருத்ராவை ஓஹோ எந்தன் பேபி படத்தின் மூலம் கதாநாயகானாக அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படம் வரும் ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Next Story