Connect with us

Cinema News

தன் வினை தன்னைச் சுடும்!.. அழுதுகொண்டே போன அமீர்கான் மகள்.. அதுக்குள்ள டைவர்ஸா?..

அமீர்கான் தன் 60வது பிறந்தநாளை பல பாலிவுட் பிரபலங்களுடன் கோலாகலமாக கொண்டாடி இருந்தார். மேலும், தனது மூன்றாவது திருமணத்தை பற்றியும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அமீர்கானின் மகள் இரா கான் கண் கலங்கிய படி காரில் ஏறிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமீர்கான் கஜினி, லக் பை சான்ஸ், ஃபனா, ரங் தே பசந்தி, தில் சாத்தா ஹை, லகான், மேலா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தாரே ஜமீன் பர், ஜானே தூ யா ஜானே, டெல்லி பெல்லி போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். மேலும், குயாமத் சே குயாமத் டக், ஹம் ஹெயின் ரஹி பியார் கே ஆகிய படங்களை எழுதியும் இயக்கியுமுள்ளார்.

பாலிவுட்டில் முன்னனி ஹிரோக்களில் ஒருவரான அமீர்கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அமீர்கானின் பிறந்த நாளை முன்னிட்டு அமீர்கான் கூலி படத்தில் நடித்திருப்பதற்கான அப்டேட்டை வெளியிட்டார் இயக்குனர் லோகேஸ் கனகராஜ்.

நடிகர் அமீர்கானுக்கு ரீனா தத் மற்றும் கிரண் ராவ் என இரு மனைவிகள் உண்டு. அவர்கள் இருவரையும் அவர் விவாகரத்தும் செய்துவிட்டார். மேலும், தற்போது தனது 60வது பிறந்த நாளன்று அவர் 18 மாதங்களாக கௌரி ஸ்பராட் என்பவரை காதலித்து வருவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமீர்கானின் மகள் இரா கானுக்கு கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் தன் தந்தையை சந்தித்து செல்லும் போது இரா கான் கண் கலங்கியபடி காரில் ஏறி சென்றது ரசிகர்கள் மத்தியில் பல கேள்ளிவிகள் ஏழும்பியுள்ளன. இரா கானுக்கும் அவரது கணவருக்கும் ஏதாவது பிரச்னையா என்றும் அமீர்கான் தனது மனைவிகளை விவாகரத்து செய்தது போல இரா கானின் கணவர் விவாகரத்து செய்யப் போகிறாரா என ட்ரோல்கள் பறக்கின்றன.

google news
Continue Reading

More in Cinema News

To Top