ஜெயம் ரவிக்காக 100 கோடி... செஞ்சதெல்லாம் மறந்துட்டீங்களே பாஸ்... பிரபலம் சொன்ன தகவல்...!
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து தான். ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 13 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் ஆர்த்தியும் ரவியும் காதலோடும் அன்யோன்யத்துடனும் வாழ்ந்து வந்த தம்பதி.
சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், விரைவில் பிரியப் போகிறார்கள் எனவும் சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார். தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறேன் எனவும் தன்னுடைய நலன் சார்ந்தவர்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக ஜெயம்ரவி தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து விவாகரத்துக் குறித்து விளக்கம் அளித்த ஆர்த்தி 'ஜெயம் ரவியிடம் இது தொடர்பாக நான் பேசுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் அவர் தரப்பில் இருந்து அதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு' என்று கூறியிருந்தார். இதையடுத்து youtube மற்றும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து இருவர் குறித்தும் ஏகப்பட்ட கருத்துக்களை பலரும் தெரிவித்து வந்தார்கள். இவர்களின் விவாகரத்திற்கு இதுதான் காரணம் என்று பல தகவல்கள் வெளிவர தொடங்கின.
அதாவது ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2 வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், ஜெயம் ரவியை வீட்டு வேலையாட்களுக்கு கொடுக்கும் மதிப்பை கூட ஆர்த்தி தரப்பில் கொடுக்கவில்லை என்றும், சின்ன சின்ன செலவுகளுக்கும் கூட பணம் கொடுக்காமல் அவமானப்படுத்துவதாகவும், ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஜெயம் ரவி வெளியேறியதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் 'இவ்வளவு நாட்கள் நான் அமைதியாக இருப்பதால் எனக்கு குற்றவுணர்ச்சி என்றோ, பலவீனம் என்றோ யாரும் நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை நான் மிக மதிக்கின்றேன். யாருடைய நற்பெயரையும் கெடுக்கும் விவாதங்களில் ஈடுபட மாட்டேன். இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ரவியிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு நான் காத்திருக்கின்றேன்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு தனது youtube சேனலில் ஜெயம் ரவி குறித்து வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். அதில் ஜெயம் ரவி தற்போது தமிழகத்தை காலி செய்துவிட்டு மும்பையில் சென்று செட்டிலாகிவிட்டார் எனவும், அங்கு அவர் ஒரு ஆபீஸ் போட இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஜெயம் ரவி இப்போது என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவரை வைத்து ஜெயம் ரவியின் மாமியார் அதாவது ஆர்த்தியின் அம்மா சுஜாதா மூன்று படங்களை தயாரித்திருக்கின்றார். மூன்று படங்களும் அந்த அளவுக்கு சரியாக ஓடவில்லை. அது மட்டுமில்லாமல் அவருக்கு சம்பளம், படத்துக்கு செலவு என்று கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகி இருக்கும்.
மூன்று திரைப்படங்களில் சைரன் படம் மட்டும்தான் ஓரளவுக்கு நல்ல பெயர் கொடுத்தது. இப்படி அவரின் கெரியருக்கு வேண்டிய அனைத்தையும் ஆர்த்தி தரப்பிலிருந்து செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் ஜெயம் ரவி மறந்துவிட்டார். மேலும் ஈகோவை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் ஒருமுறை அமர்ந்து பேசி சமரசத்திற்கு வர வேண்டும். அவர்களுக்காக இல்லை என்றாலும் அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்காகவாவது யோசிக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்.