கெனிஷாவுடன் ஜோடி போட்டு கல்யாணத்துக்கு போன ரவி மோகன்!.. ஆர்த்தி ரவிக்கு வந்ததே ஆத்திரம்!..

by SARANYA |
கெனிஷாவுடன் ஜோடி போட்டு கல்யாணத்துக்கு போன ரவி மோகன்!.. ஆர்த்தி ரவிக்கு வந்ததே ஆத்திரம்!..
X

கடந்த ஆண்டு, ஜெயம் ரவி தனது 18 ஆண்டு திருமண வாழ்க்கையிலிருந்து விலகி, மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். ஆர்த்தி, விவாகரத்தை விரும்பவில்லை என்றும், சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

இவர்களின் விவாகரத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் தான் காரணம் என பரவி வந்த வதந்திகளை பற்றி பேசிய ரவி மோகன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களின் பெயர்களை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார், குறிப்பாக கெனிஷாவுடன் இணைந்து மனநல மையம் தொடங்குவது குறித்த தனது திட்டங்களைப் பாதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.


ஆனால், இன்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் கலந்துகொண்டார். இது இருவருக்கும் இடையே உறவு இருப்பதாக பரவிய வதந்திகளை உண்மையாக்கும் விதமாக இருக்கிறது.

இது குறித்து ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நான் ஒரு வருடமாக அமைதிக்காத்ததற்கு காரணம் நான் பலவீனமானவள் என்பதல்ல என் மகன்கள் அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்க்காக, மேலும் நான் உண்மையை சொல்லி என் மகன்கள் மனதில் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை, இன்னமும் சட்டப்படி எங்களுக்கு விவாகரத்து வழங்கப்படவில்லை. எனவே தயவு செய்து மீடியாவில் என்னை முன்னாள் மனைவி என்று கூற வேண்டாம், 18 வருடங்களாக காதல், உண்மை மற்றும் நேற்மையுடன் என் பக்கம் நின்ற என் கணவர் என்னை பிரிந்தாலும் என் குழந்தைகளுக்கு அவர் தான் அப்பா என பதிவிட்டுள்ளார்.

ஒரு மனைவியாக இதை நான் பதிவிடவில்லை. எனக்கு எந்தவொரு பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. ஆனால், என்னுடைய 10 வயது மற்றும் 14 வயது மகன்களுக்கு டைவர்ஸ் பிரச்சனைகள் என்றாலே என்னவென்று தெரியாத நிலையில், எங்கள் மூவரையும் தனிமையில் தவிக்கவிட்டு இன்று வேறொரு பெண்ணுடன் நீங்கள் பட்டு உடையில் வேறொரு பெயருடன் புதிய நபராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் என்றைக்குமே உங்களை அப்பா என அழைக்கும் அந்த 2 குழந்தைகளுக்கும் நீங்க அப்பா தான் என பதிவிட்டுள்ளார்.


கெனிஷா பிரான்சிஸை விரைவில் ரவி மோகன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதற்காகவே இன்று பிரபலங்கள் பலர் பங்கேற்ற ஐசரி கணேஷ் மகள் திருமணத்துக்கு அழைத்து வந்து தாங்கு தாங்கு என தாங்கினார் என்கின்றனர். இதனால், ஆத்திரப்பட்டே ஆர்த்தி ரவி இப்படியொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Next Story