டார்ச்சர்னா அம்மா வீட்டுக்கு போகாம அவ வீட்டுக்கு ஏன் போனாரு?!.. கொதித்தெழுந்த ஆர்த்தி ரவி!..

by MURUGAN |   ( Updated:2025-05-20 10:53:29  )
ravi mohan
X

Aarti Ravi Mohan: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆர்த்தி தன்னை கட்டுப்படுத்தியதாகவும், அவரின் ஆடம்பர வாழ்க்கையால் தான் கடனாளி ஆனதாகவும், ஆர்த்தியின் அம்மா 100 கோடி கடனை தனது தலையில் சுமத்தியதாகவும் அடுக்கடுக்கான புகார்களை சொன்னார் ரவி. அதோடு, கோவாவில் ஹீலிங் சென்டர் நடத்தி வரும் கென்னிஷாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பான செய்திகள் வெளியான போது இதை மறுத்த ரவி இப்போது அதை ஒப்புகொண்டிருக்கிறார். அதோடு, கெனிஷாவுக்கு மும்பையில் ஆடம்பர பங்களாவை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும், கோவாவில் ஹீலிங் செண்டரை மேம்படுத்தவும் சில கோடிகளை கொடுத்திருக்கிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருபக்கம் ‘அன்பான பெண்ணையே ஆணின் மனம் நாடும்’ என கென்னிஷா பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், ஆர்த்தி ரவி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது.


நடிப்பவர்களைத்தான் இந்த உலகம் நம்புகிறது. என் திருமண வாழ்க்கை முறிந்து போனதற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடுகளோ காரணமில்லை. ஒரு மூன்றாம் நபர்(கென்னிஷா) எங்களை பிரித்தார். விவகாரத்துக்கு விண்ணப்பிக்கும் முன்பே அவர் எங்களின் வாழ்க்கையில் வந்துவிட்டார். கணவரின் உடல்நிலை பாதிக்கக்கூடாது என எல்லா பெண்களும் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படித்தான் நானும் நடந்துகொண்டேன். இதை கட்டுப்படுத்தினேன் என்கிறார் என் கணவர்.

எல்லாம் இழந்து அவர் வீட்டை விட்டு செல்லவில்லை. சரியாக தெளிவாக திட்டமிட்டு அவருக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துகொண்டு 5 கோடி மதிப்பிலான காரில்தான் போனார். என்னை வீட்டு போவதாக இருந்தால் அவரின் பெற்றோரின் வீட்டிற்கு போகாமல் ஏன் வேறொரு பெண்ணின் வீட்டுக் கதவை ஏன் தட்டினார்?. நான் துன்புறுத்தினேன் என்றால் இத்தனை வருடங்கள் அதுபற்றி பேசாமல் இருந்தது ஏன்?. ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்?. அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்பது தெரிந்து அவர் முந்திக்கொண்டார். அதற்கு மேல் ரகசிய வாழ்க்கையை காப்பாற்ற முடியாது என்பதே அதற்கு காரணம்.


கடந்த ஒரு வருடத்தில் 4 முறை மட்டுமே அவர் மகன்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் கையில் செல்போன் இருந்தும் அவர் அவர்களுடன் பேசுவதே இல்லை. அவர்கள் மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள். உண்மையில் அவர் தன் மகன்களை சந்திக்க விரும்பினால் யாராலும் அதை தடுக்க முடியாது. அவர்களை தன்னுடன் வைத்துக்கொள்ள சட்டரீதியாக கூட அவர் முயற்சி செய்யவில்லை. பிள்ளைகளை பார்க்க அவர்களை அந்த பெண்ணின் இடத்திற்கு அழைத்தால் எப்படி ஏற்பது?..

சினிமாவில் அடங்க மறுக்கும் ஒரு நடிகரை நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக சொல்வதை கேட்டால் வேதனையோடு சிரிப்புதான் வருகிறது. 15 வருடங்கள் அவருக்காக என் கனவு, லண்டனில் பெற்ற படிப்பு, லட்சியம் என எல்லாவற்றையும் துறந்தேன். என் சொந்த அடையாளத்தை பயன்படுத்தியிருந்தால் இப்போது இருப்பதை விட 2 மடங்கு வசதியாக இருந்திருப்பேன். என் கவுரவத்தை காப்பாற்றிகொள்ளவே இந்த உண்மைகளை சொல்கிறேன்.

என்னை பிரிய நினைத்தால் மிகவும் கண்ணியத்தோடு அதை செய்திருக்கலாம். இப்போது என் கண்ணியமும், நேர்மையும் உங்களால் பொது விவாதமாக மாற்றப்பட்டிருப்பதை வேதனையோடு கடக்க முயற்சி செய்கிறேன். உண்மை தெரிந்த ஒரே நபர் என் கணவர். அவர் எனக்காக நின்று பேச மறுக்கிறார். என்னை கொச்சைப்படுத்தும் உங்களுக்கு நிம்மதி கிடைக்காது. நான் பலவீனமானவள் இல்லை. ஒருபோதும் தாழ்ந்து போகமாட்டேன். நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். நீதி கிடைக்க காத்திருக்கிறேன்’ என அந்த அறிக்கையில் ஆர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story