1. Home
  2. Cinema News

Aaryan: படத்தோட கிளைமேக்ஸ மாத்தியாச்சி!.. விஷ்ணு விஷாலுக்கு ஹிட் கிடைக்குமா?!..

aaryan

தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தான் நடித்த பல படங்களை அவர் தயாரித்தும் இருக்கிறார். விஷ்ணு விஷால் அறிமுகமான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம் பெற்ற பரோட்டா காமெடிதான் சூரியை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

அதன்பின் விஷ்ணு பல படங்களில் நடித்திருந்தாலும் நீர்ப்பறவை, ராட்சசன், FIR, கட்டா குஸ்தி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் போன்ற படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது. சமீபத்தில் அவரின் நடிப்பில் உருவான ஆர்யன் படம் வெளியானது. ராட்சசன் படம் போலவே ஒரு கிரைம் திரில்லர் படமாகவே ஆர்யன் உருவாகியிருந்தது.

இப்படத்தை பிரவீன் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் ஸ்ரதா ஸ்ரீநாத், செல்வ ராகவன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ராட்சசன் அளவுக்கு நேர்த்தியாக உருவாக்கப்படவில்லை என்றாலும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. நல்ல வசூலையும் பெற்றது. அதேநேரம் இந்த படத்தின் வசூல் FIR மற்றும் கட்டாகுஸ்தி படங்களுக்கு இடையே இருப்பதாக விஷ்ணூ விஷால் கூறியிருக்கிறார்.

இந்நிலையில்தான் படத்தின் கிளைமேக்ஸை தற்போது மாற்றியிருக்கிறார்கள். தொடர்கொலைகள் செய்பவன் நல்லவன். படத்தின் இறுதியில் அவன் மரணமடைவது போல வரும் காட்சி வருவதை ரசிகர்கள் ஏற்கவில்லை. இதுவே படத்தின் வசூலை பாதித்திருப்பதாக சொல்லப்பட்டதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளனர். கிளைமேக்ஸ் மாற்றப்பட்டிருப்பதால் இந்த வாரம் முதல் ஆர்யன் படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.