அவங்க இதுல நடிச்சா கரெக்டா இருக்கும்... சூப்பர் ஸ்டாரே ரெகமெண்ட் பண்ண 90ஸ் பிரபலம்...!
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு 'வானவில்' என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கமலஹாசன் உடன் விருமாண்டி என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்த இவர் 10 ஆண்டுகளாக திரை துறையில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் ஜோதிகாவின் '36 வயதினிலே' என்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிக பிஸியாக நடித்து வருகின்றார். மகாராஜா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபிராமி.
அதைத் தொடர்ந்து தற்போது கமலஹாசன் உடன் தக் லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். குறிப்பாக ரஜினிகாந்துடன் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் இவர் ஸ்வேதா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அபிராமி இப்படத்தில் நடித்தது தொடர்பான சுவாரசியத்தை பகிர்ந்திருந்தார்.
அதாவது ஸ்வேதா என்கின்ற கதாபாத்திரத்தை குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கூறிய போது அவர் முதலில் என்னுடைய பெயரை தான் சொன்னாராம். அபிராமி இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனரிடம் தெரிவித்ததாக கூறினார். மேலும் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்த் அவர்களே என்னிடம் நான்தான் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என சொன்னேன் என்று என்னிடம் கூறிய போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
சினிமாவில் நான் ஆரம்ப காலத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பலரும் என்னிடம் கேட்பார்கள். கமலஹாசன் தான் நடித்து விட்டீர்கள், அடுத்தது ரஜினிகாந்த் உடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த கனவு தற்போது உண்மையாக இருக்கின்றது. இது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி என்று அந்த பேட்டியில் அபிராமி மனம் திறந்து பேசி இருந்தார்.