அறிவா பேசுறேனு அதுல கோட்ட விடுறாரு.. கமல் பற்றி அபிராமி இப்படி சொல்லிட்டாங்களே

by ROHINI |
abirami
X

abirami

சினிமாவை பொறுத்தவரைக்கும் ஸ்கிரீனில் பார்க்கக்கூடிய ஜோடி ஒரு படத்தில் பிரபலமாகி விட்டால் அடுத்தடுத்து படங்களில் அவர்கள் ஜோடியாக நடிக்க ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்ததின் மூலம் அந்த படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.

ஏன் அந்த படத்திற்கு பிறகு கூட கமல் அபிராமியை சேர்த்து வைத்து பல வதந்திகளும் பரவியது. குறிப்பாக முத்தக்காட்சியில் நடித்ததன் மூலம் இருவரையும் சேர்த்து வைத்து பல செய்திகள் வெளியானது. இப்போது அந்த படத்திற்கு பிறகு மீண்டும் தக் லைஃப் திரைப்படத்தில் ஜோடியாக அபிராமி நடித்திருக்கிறார். ஆனால் இதற்கிடையில் கமலின் ஒரு சில படங்களில் மற்ற ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுக்கவும் செய்தார் அபிராமி.

குறிப்பாக விஸ்வரூபம் படத்தில் அபிராமி டப்பிங் கொடுத்திருக்கிறார். தொழில் ரீதியாக கமலுக்கும் அபிராமிக்கும் இடையே நல்ல ஒரு நட்பு இருந்து வருகிறது. குணா படத்திற்கு பிறகு தான் தன்னுடைய பெயரை அபிராமி என மாற்றிக் கொண்டார். அந்த அளவுக்கு கமலின் தீவிர ரசிகை அபிராமி. அதை ஒவ்வொரு மேடையிலும் நிரூபித்து காட்டியிருக்கிறார். இந்த நிலையில் கமலிடம் இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள் என கேட்டதற்கு அபிராமி கொடுத்த பதில் இதோ.

அவரிடம் எதுவுமே மாற்ற தேவையில்லை. ஜென்டில்மேன் ஆக இருக்கிறார். ஆனால் அதீத புத்திசாலியாகவும் இருப்பதனால் அவர் கூறும் சில விஷயங்கள் மக்களிடம் சரியாக போய் கனெக்ட் ஆக முடியவில்லை. அதாவது மக்களுக்கு புரியவில்லை. அதனால் மக்களுக்கு அவர் சொல்கிற விஷயம் ஈசியாக போய் கனெக்ட் ஆகக்கூடிய வகையில் அவர் சொன்னால் நன்றாக இருக்கும். இதுதான் என்னுடைய ஆசை என கூறினார் அபிராமி.

abirami

இது இவருடைய கருத்து மட்டும் அல்ல எல்லாருடைய கருத்தும் அதுதான். ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் என்ன சொல்ல வருகிறார் என்பதை கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் விளக்கமாக மிகத் தெளிவாக சில நிமிடங்கள் பேசுவார் .ஆனால் கடைசியில் என்ன சொல்ல வந்தார் என யாருக்கும் புரியாது. அதைத்தான் இப்போது அபிராமியும் சொல்லி இருக்கிறார்

Next Story