Abhinay: துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்!...
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அபிநய். இந்த படத்தில் தனுஷ் ஹீரோ என்றாலும் அபிநய் இரண்டாவது ஹீரோ போல நடித்திருப்பார். இவருக்கும் நிறைய காட்சிகள் இடம் பெற்றிருந்தது.அதன்பின் ஜங்சன், சக்சஸ், சிங்கார சென்னை, தாஸ். பொன் மேகலை, தொடக்கம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் வெளியானது. இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் கடந்த 10 வருடங்களாக அபிநய் சினிமாவில் நடிக்கவில்லை. மேலும், தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் விற்று விட்டதாகவும் பேட்டி கொடுத்து அதிர்ச்சியை உண்டாக்கினார். ஆனாலும், அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

அதன்பின் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவரின் கிட்னி செயல் இழந்ததாக சொல்லப்பட்டது எனவே திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கையும் வைத்தார். இவர் கோரிக்கையை ஏற்று தனுஷ் அவருக்கு பண உதவியும் செய்திருந்தார். KPY பாலாவும் நேரில் சென்று அபிநய்க்கு பண உதவி செய்தார். மேலும், பாலா நடித்த காந்தி கண்ணாடி பட விழாக்களிலும் அபிநய் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்திருக்கிறார். அவரின் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
