
Cinema News
KPY Bala: என்னது உன்ன வச்சு சம்பாதிக்கிறோமா? பாலாவின் பேச்சால் கடுப்பான நடிகர்
KPY Bala:
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் கே பி ஒய் பாலா. அந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து அவரை வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற காரணமாக அமைந்தது .அதன் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார் கே பி ஒய் பாலா. குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவருடைய புகழ் மேலோங்கியது. அதில் கோமாளியாக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த பாலா தன்னையே பாடி ஷேமிங் செய்தும் மற்றவர்களை பற்றி கிண்டலாக பேசியும் தனது காமெடி தனத்தால் ஒரு நீங்கா இடம் பிடித்தார் கே பி ஒய் பாலா.
வினையாக மாறிய சமூக சேவை:
அதற்கு அடுத்தபடியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் மூலம் படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்களில் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பாலா முதல் முறையாக காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகும்போதே அவருக்கு பிரச்சனையும் பின்னாடியே வந்தது. சின்னத்திரையில் ஆங்கராகவும் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் வருகிற தன்னுடைய சம்பளத்தை வைத்தும் சின்ன சின்ன உதவிகளை செய்து வந்தார் பாலா.
புயல் வெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய ஆரம்பித்து அதன் பிறகு ஆங்காங்கே இருக்கும் மக்கள் வறுமையினால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்? அவர்களுக்கு தேவையான உதவிகளை ஓடி போய் செய்து வந்தார் பாலா. அது ஒரு பக்கம் பாராட்டை பெற்றாலும் இன்னொரு பக்கம் சர்ச்சையை கிளப்பியது .ஏனெனில் அவருடைய வருமானமும் மிகக் குறைவு. ஆனால் அவர் செய்யும் உதவி அளப்பறியது. கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட இந்த மாதிரி உதவிகளை செய்ய மாட்டார்கள். ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மிதிவண்டி வாங்கி கொடுப்பது, ஸ்கூட்டர் வாங்கி கொடுப்பது, ஊனமுற்றவர்களுக்கான வண்டிகளை வாங்கிக் கொடுப்பது என அடுத்தடுத்து அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு உதவிகளை செய்து வந்தார் பாலா.
பூகம்பத்தை கிளப்பிய உமாபதி:
இதுதான் அவருக்கு பெரிய வினையாக மாறி இருக்கிறது. பத்திரிக்கையாளர் உமாபதி திடீரென ஒரு பேட்டி கொடுத்து அதன் மூலம் அனைவரையும் பாலாவின் பக்கம் திரும்ப வைத்தார். அதாவது பாலாவின் பின்னணியில் யாரோ ஒருவர் இருந்து அவரை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் ஒரு இணைய கூலி ஆக செயல்படுகிறார் என்றும் ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்பினார். அது மட்டுமல்ல அதற்கான ஆதாரங்களும் அவரிடம் இருப்பதாக கூறினார். எஃப்சி முடிந்து விட்டதாகவும் ஆர் சி புத்தகம் வேறு ஒரு யாரோ பெயரில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இரு சக்கர வண்டிகளும் புதியதாக கொடுக்கவில்லை. பழைய வண்டிகளை தான் பாலா கொடுத்திருக்கிறார் என்றும் தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவலை கிளப்பினார். அதன் பிறகு தான் பாலாவை பற்றி அனைவருமே கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இதில் பாலா ஒரு செல்பி வீடியோ எடுத்து நான் இணைய கூலி இல்லை தினக்கூலி என்று பதில் அளித்தார். அதன் பிறகும் பாலாவை பற்றி தொடர்ந்து இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது பற்றி இப்போ வரைக்கும் பாலா எதுவுமே வாய் திறக்கவில்லை. இது மட்டுமல்ல இவரால் பயன்பெற்றவர்களும் பாலாவைப்பற்றி இந்த மாதிரி செய்திகள் வருகிறதே? இப்படி எல்லாம் கிடையாது என்பதுபோல கூட யாருமே முன்வந்து தைரியமாக சொல்லவில்லை.
தொடர் சந்தேகம்:
இதுவும் ஒருவித சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. ஏனெனில் ஒரு பழங்குடி பகுதி கிராமத்தில் ஆம்புலன்ஸ் வழங்கினார் பாலா. அங்கு அந்த ஆம்புலன்ஸ் செயல்படுகிறதா என்பது கூட இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. இது ஒரு பப்ளிசிட்டிக்காக மட்டுமே கொடுக்கப்பட்டதா என்பது போல் தொடர்ந்து சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில் விஜய் டிவியில் பாலாவுடன் சக தோழராக இருந்து பணியாற்றியவர் நடிகர் ஆதவன். அவரும் பாலாவிடம் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார் .அதாவது உன்னை பற்றி இந்த மாதிரி தகவல் வந்து கொண்டிருக்கின்றது.

நீ ஏதாவது சொல்லி தான் ஆக வேண்டும் என்றெல்லாம் அவரும் ஒரு பேட்டியில் கூறி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் ஆதவன் கூறும் பொழுது பாலா தன்னிடம் போனில் பேசியதாகவும் அவர் பேசும்போது நீங்களும் ஏன் இப்படி என்னை பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு நான் அதற்கான விளக்கத்தை கொடுத்து விடு பாலா என்று சொன்னதாகவும் ஆதவன் கூறினார். மேலும் அவர் போனில் பேசும் போது ‘நான் உன் மேல இருக்கிற அக்கறையில் கால் பண்ணி இதில் இருந்து வெளியே வந்துடுன்னு சொன்னா, நீ வந்து ‘என்னை வச்சு பேசி சம்பாதிக்கிறீர்கள்’ என்று சொல்ற. நான் ஏதோ உன்னை வச்சு தான் சாப்பிடுற மாதிரி பேசுற. இதுக்கு பதில் சொல்லுப்பான்னு சொன்னா நீ இப்படி பேசுற ’என அந்த பேட்டியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆதவன்.