
Cinema News
KPY Bala: எல்லாமே ஷூட்டிங்கா? நைட் வரைக்கும் பாலாவுக்கு டைம்.. பின்னணியில் என்னதான் நடக்குது?
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திய பிறகே பாலாவின் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்ற வகையில் சந்தேகம் எழுந்து வருகின்றன. அதாவது ஆம்புலன்ஸ் வழங்கிய வகையில் அந்த ஆம்புலன்ஸ் பழையது என்றும் ஆர்சி புத்திகம் ஃபேக் என்றும் எஃப்சி முடிந்துவிட்டது என்றும் உமாபதி ஆதாரத்துடன் கூறினார்.
ஆனால் அதற்கான விளக்கத்தை பாலா இதுவரைக்கும் கொடுக்கவில்லை. ஏன் காமெடி நடிகர் ஆதவனும் பாலாவிடம் ‘இதற்கான விளக்கத்தை கொடுத்தால்தான் நீ நிம்மதியாக இருக்க முடியும். இல்லை உனக்கு பின்னணியில் யாராவது இருக்கிறார்களா’ என்றும் கேட்டாராம். அதற்கு பாலா ‘ஐயோ அப்படி இல்லைனா. நீங்களும் இப்படி சொல்றீங்க. நான் இன்னும் இரண்டு நாள்களில் சொல்கிறேன்’ என கூறினாராம்.
இதை பற்றி ஆதவன் கூறும் போது ‘இன்று இரவுக்குள் பாலா இதற்கான விளக்கத்தை கொடுத்திருக்க வேண்டும். இன்று இரவு வரைக்கும் நான் காத்திருப்பேன். இல்லையெனில் அப்புறம் பார்ப்போம்’ என கூறியிருக்கிறார். மேலும் இவ்வாறு பாலாவை பற்றி தொடர் சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவரால் பயனடைந்தவர்கள் யாராவது பாலாவை அப்படி சொல்லாதீர்கள் என கூறியிருக்கிறார்களா?
ஏன் ஒரு பழங்குடி கிராமத்தில்தான் ஆம்புலன்ஸை வழங்கினார் பாலா. அந்த ஆம்புலன்ஸை வைத்து ஒரு அமைப்பு நிச்சயமாக இயங்கும் அல்லவா? அந்த அமைப்பு பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லையே? ஒரு கேமிராவை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். உதவி செய்யும் போது அதற்கேற்ப ஒரு பாடலை போட்டு சோசியல் மீடியாக்களில் வைரலாக்கி விடுகின்றனர். ஒரு சூட்டிங் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.
ஒரு வேளை பாலாவை வைத்து யாரோ ஒருவர் விளம்பரத்தை தேடிக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. இது கூட பாலாவை யாரும் கேள்வி கேட்கவில்லை. அவருக்கு பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். அவர்களிடம் பாலா மாட்டிக் கொண்டாரா என்று நினைக்க தோன்றுகிறது. ஜனநாயகத்தில் எல்லாத்துக்கும் உரிமை இருக்கிறது. பேச்சு சுதந்திரம் இருக்கிறது, எழுத்து சுதந்திரம் இருக்கிறது ஆனால் அதற்கு என ஒரு முறை இருக்கிறது அல்லவா?
ஒருத்தர் இரண்டு பேருக்கு வண்டியோ ஆம்புலன்ஸோ வாங்கி கொடுக்கலாம். இதுவே ஒரு பத்து பேருக்கு அல்லது அதற்கு மேல் வாங்கிக் கொடுக்கும் போது கண்டிப்பாக அரசாங்கத்திடம் சொல்ல வேண்டும். ஆனால் அவருடைய வீடியோவிலேயே பாலா ‘ஒரு ஆஸ்பத்திரியில் ஊசி போட்டு கையெல்லாம் வீங்கி விட்டது. இதையெல்லாம் சரி செய்யத்தான் நான் இறங்கியிருக்கிறேன்’ என்பது போல் பேசியிருந்தார்.

அது தவறு. என்னை பொறுத்தவரைக்கும் பாலா மீதுள்ள குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை. அதனால் என்னால் தெளிவாக எதையும் கூற முடியாது. இன்னும் பாலா இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பாலாவிடம் இருந்து இதற்கான விளக்கம் இன்னும் வரவில்லை என்று பார்க்கும் போதுதான் எனக்கு நெருடலாக இருக்கிறது என ஆதவன் ஒரு பேட்டியில் இந்த தகவலை கூறியிருக்கிறார்.