கதையை மாற்றி இயக்குனர்களை காலி செய்யும் அஜித்!.. விடாமுயற்சி என்ன ஆகுமோ!...

by Murugan |
vidaamuyarchi
X

vidaamuyarchi

Ajithkumar: சினிமாவில் ஒரு படத்திற்கு என்ன கதை என்பதை தயாரிப்பாளர்தான் முடிவு செய்வார். சினிமா துவங்கி பல வருடங்கள் அப்படித்தான் இருந்தது. எம்.ஜி.ஆர் வந்த பின் அவர்தான் கதையை தேர்ந்தெடுத்தார். அவருக்கு பின் சினிமா இயக்குனர்களின் கைக்கு வந்தது. 1980 வரை கதையை எழுதுவதற்கென்றே தனி நபர் இருப்பார்கள். அந்த கதையை இயக்குவது மட்டுமே இயக்குனரின் வேலை. பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள் கதைகளை இன்னொருவரிடமிருந்து வாங்கி படத்தை இயக்குவார்கள்.

நடிகர்கள்: ஒருகட்டத்தில் இயக்குனர்களே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என போட துவங்கினார்கள். இப்போது எல்லா படங்களுக்கும் இயக்குனர்களே கதையை எழுதி இயக்குகிறார்கள். அதேநேரம், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களிடம் ஒரு இயக்குனர் ஒரு கதையை சொன்னால் அது தங்களின் இமேஜுக்கு சரியாக இருக்குமா?.. தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் காட்சிகள் அதில் இருக்குமா என்றெல்லாம் யோசிப்பார்கள்.

அந்த கதையில் அப்படி காட்சிகள் இல்லையென்றால் அதை வைக்க சொல்லுவார்கள். அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த படத்திற்கு அவர் இயக்குனர். இல்லையேல் வேறு இயக்குனர் வருவார். இதை எல்லா நடிகர்களுமே தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதாவது இயக்குனர்களின் கையில் இருந்த சினிமா ஹீரோக்களின் கைக்கு வந்துவிட்டது.


நடிகர்களின் கதை அறிவு: அதேநேரம், நடிகர்களுக்கு முழுமையான கதை அறிவு இருக்கும் என சொல்ல முடியாது. ஒரு இயக்குனருக்குதான் அவர் மனதில் இருக்கும் கதை திரையில் எப்படி வரும் என்பது தெரியும். நடிகர்களுக்கு அது தெரியாது. ஆனாலும் எல்லாவற்றிலும் தலையிட்டு இயக்குனரின் மனதில் நினைத்திருந்த கதையையே மொத்தமாக மாற்றிவிடுவார்கள்.

அஜித்குமார்: நடிகர் அஜித்தும் சில படங்களில் இதை செய்திருக்கிறார். சரணின் இயக்கத்தில் ஒரு சாதாரண பட்ஜெட்டில் உருவாகவிருந்த அசல் படத்தில் அஜித் உள்ளே வந்ததும் மொத்த கதையும் மாறியது. படமோ தோல்வி. வினோத் வலிமை படத்தை எடுத்து அஜித்திடம் போட்டு காட்டிய போது ‘படம் மிகவும் ரிச்சா, கிளாசியா இருக்கு. இதை லோக்கலைஸ் பண்ணணும் என சொல்லி அம்மா, அண்ணன், தம்பி செண்டிமெண்ட் காட்சிகளை வைக்க சொன்னார் அஜித். வினோத்துக்கோ அதில் விருப்பமில்லை. ஆனால், அஜித் சொன்னதால் அந்த காட்சிகள் சேர்க்கப்பட்டது. அதிலும், இதில் சில காட்சிகளே அஜித்தே படமாக்கினார் எனவும் ஒரு செய்தி உண்டு. அப்படி வெளியான அந்த படம் ‘கிரின்ச்’ என ரசிகர்களால் நக்கலடிக்கப்பட்டது. அஜித் அப்படி யோசித்ததற்கு காரணம் விஸ்வாசம் படத்தில் இருந்த செண்டிமெண்ட் காட்சிகள்தான்.


விடாமுயற்சி உருவான கதை: அதேபோல், தான் சொன்னபடி கதையை மாற்றாத விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை இயக்குனராக்கினார் அஜித். ஆனால், இதுதான் கதை என முடிவு செய்யவே 6 மாதங்கள் ஆகியது. மகிழ் திருமேனி சொன்ன கதைகளை வேண்டாம் என சொல்லிவிட்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘பிரேக் டவுன்’ கதையை எடுப்போம் என்றார் அஜித். மகிழ் திருமேனிக்கு அதில் விருப்பமில்லை. ஆனாலும், ஹீரோ சொல்லிவிட்டதால் அவர் என்ன ஆசைப்பட்டாரோ அதை எடுத்து கொடுத்துவிட்டார். ஆனால், படம் வெளியாகி நம் மீது விமர்சனம் என்பதை புரிந்துகொண்டு எச்சரிக்கையாக ஒன்றை சொல்லிவிட்டார்.

விடாமுயற்சி என்னுடைய கதை இல்லை. நான் அஜித்துக்கு பண்ண நினைத்தது ஒரு ஆக்‌ஷன் திரில்லர். இந்த படத்தின் கதையை அஜித்தே என்னிடம் சொன்னார். அவரோட இமேஜுக்கும் இந்த படத்தில் அவர் பண்ணியிருக்கும் கதாபாத்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு மாஸ் எண்டர்டெயினர் படம் இல்லை. அதை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் வரவேண்டாம். இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என அஜித் சார்தான் ஆசைப்பட்டார்’ என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதாவது சரணும், வினோத்தும் சொல்ல நினைத்து சொல்லாமல் போனதை தைரியமாக, ஓப்பனாக மகிழ் திருமேனி சொல்லிவிட்டார். அஜித் போட்ட கணக்கு வொர்க் அவுட் ஆகுமா என்பது விடாமுயற்சி படம் வெளியான பின்னரே தெரியவரும். அப்படியே படம் ஓடவில்லை என்றாலும் இதனால் அஜித்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. பணம் போட்ட தயாரிப்பாளருக்குதான் நஷ்டம்.

அன்பை எப்போதும் போதிக்கும் அஜித் இதை யோசிப்பாரா?!..

Next Story