என்ன இப்படி சொல்லிட்டாரு!.. அஜித் எடுத்திருக்கும் கொள்கை முடிவு.. நொந்துபோன ரசிகர்கள்!..
நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் மிகவும் பண்பாக தன்மையாக நடந்து கொள்ளக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரைக் குறித்து யார் பேசினாலும் உயர்வாகத்தான் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு தன்னுடைய குணத்தால் மதிக்கக்கூடிய நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது தனது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.
விடாமுயற்சி: கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஹச் வினோத் இயக்கத்தில் துணிவு என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வந்த இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது. இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது.
பொங்கல் ரிலீஸ்: முதலில் அஜித்தின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கலுக்கு ரிலீசாகப் போகின்றது என்று கூறி வந்தார்கள். ஆனால் திடீரென்று விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸாக இருந்ததால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு தள்ளிப் போய் இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகின்றது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அனிருத் இசையில் உருவாகி இருந்த முதல் சிங்கிள் சவதீகா பாடல் சமூக வலைதள பக்கங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தொடர்ந்து அஜித் ரசிகர்கள் இப்பாடலுக்கு வைப் செய்து வருகிறார்கள். மேலும் நடிகர் அஜித் இந்த பாடலுக்கு நடனமாடி இருப்பது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அஜித்தின் கொள்கை முடிவு: இரண்டு வருடங்களுக்கும் சேர்த்து அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை அதனைத் தொடர்ந்து மே மாதம் என்று அஜித்தின் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்த இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகளையும் முடித்திருக்கும் அஜித் ஐரோப்பியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார்.
அதனை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் திரும்புவார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் ஒரு முடிவை எடுத்து இருக்கின்றாராம். அதாவது வருடத்திற்கு இனிமேல் ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடிக்கலாம் என முடிவு செய்திருக்கின்றாராம்.
இந்த செய்தி தற்போது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகர் அஜித் தற்போது உடல் எடையை குறைத்து பழைய பார்முக்கு திரும்பி இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. திடீரென்று இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.