1. Home
  2. Cinema News

என் பசங்க எப்போதும் கேட்கிற கேள்வி இதான்! அஜித் கொடுத்த பேட்டி

ajith
ஆங்கில் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு அஜித் அடுத்தடுத்து பதில்களை கொடுத்து வந்தார். 33 ஆண்டுகால சினிமாவை பற்றியும் பேசியிருக்கிறார். 

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அஜித் நேர்காணல் கொடுத்தது இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. நடிப்பு மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் படு பிஸியாக இருக்கும் அஜித் குடும்பத்துடனும் அவ்வப்போது தனது நேரத்தை செலவழித்து வருகிறார். தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை பற்றி அந்த ஊடகத்தில் பேசியிருக்கிறார் அஜித். 

ஆரம்பத்தில் அஜித் என்ற பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்ததாம். ஏனெனில் அந்த பெயர் மக்கள் பயன்படுத்தும் பழக்கமான பெயர்களில் இருந்து வேறுபட்டதாக இருந்ததால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாக அஜித் கூறியிருக்கிறார். ஆனால் அதை மாற்ற முடியாது என்ற குறிக்கோளில் அஜித் இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் தமிழ் பேசவே மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

ஆனால் தமிழ் உச்சரிக்க தெரிந்திருக்கிறது. அதனால் தமிழில் பேச மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். இப்படிப்பட்ட புகழ் ஒரே நாள் இரவில் வந்தது இல்லை. கடின உழைப்பு, வழியில் கற்றுகொள்வதன் மூலம் வந்த ஒன்று என கூறியுள்ளார். நிறைய சவால்களை சந்தித்ததாகவும் அவை எல்லாவற்றையும் கடந்துதான் வந்ததாகவும் கூறியுள்ளார். கார் ரேஸை பொறுத்தவரைக்கும் 19 வயது இளைஞனைப் போலவேதான் இன்னும் நான் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்,

சினிமாவிலும் சரி ரேஸிலும் சரி நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். புகழ் என்பது இரட்டை வாள் போன்றது. நமக்கான ஆறுதல்,  நல்ல வாழ்க்கை முறையை பொறுத்தவரைக்கும் நிறையவே அது தருகிறது.

அதே போல் முக்கியமான விஷயங்களை நம்மிடம் இருந்து பறித்துக் கொள்கிறது. என்னுடைய குழந்தைகள் எப்போதும் ‘ஏன் ஒரு வழக்கமான தந்தையாக உங்களால் இருக்க முடியவில்லை’ என என்னிடம் கேட்பார்கள் என கூறியிருக்கிறார். அதாவது புகழ், பப்ளிசிட்டி வந்ததும் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது.  வெளியில் சுதந்திரமாக சுற்ற முடியாது.

சினிமா பார்க்க முடியாது. தெரு ஓர டீக்கடையில் நின்று டீ குடிக்க முடியாது. இதைத்தான் அஜித் அவருக்கு வந்த புகழ், பெருமை பற்றி அந்த ஊடகத்தில் பேசியுள்ளார். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.