உலகமே விடாமுயற்சி கொண்டாட்டத்தில் இருக்கு!.. ஆனா அஜித் என்ன செய்றாரு தெரியுமா?..

by Ramya |   ( Updated:2025-02-06 11:12:51  )
vidamuyarchi
X

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவரின் திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள் என்பதை இன்று நாம் கண்கூட பார்த்திருக்கின்றோம். ஏனென்றால் இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்திற்கு பால் அபிஷேகம் தொடங்கி பீர் அபிஷேகம் வரை செய்து படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

விடாமுயற்சி திரைப்படம்: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். படம் இன்று தமிழகத்தில் மட்டும் 1000 ஸ்கிரீன்களில் வெளியாகி இருக்கின்றது.


விடாமுயற்சி விமர்சனம்: 2 வருடம் கழித்து நடிகர் அஜித்தை திரையரங்குகளில் பார்ப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து விடுகிறார்கள். படத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கின்றது. அஜித் மற்றும் திரிஷாவின் காதல் காட்சிகள் அழகாக ஒர்க் அவுட்டாகி இருக்கின்றது.

மேலும் அனிருத் இசை படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றது. வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ரெஜினா கலக்கி இருக்கிறார்கள் என்று படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றது. படத்தின் கதையை மிகவும் ஸ்லோவாக இருக்கின்றது. இது வழக்கமான அஜித் திரைப்படம் போல் இல்லை. இரண்டாவது பாதி மிகவும் போர் அடிக்கின்றது என்று கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

ரேஸில் கவனம் செலுத்தும் அஜித்: நடிகர் அஜித் கடந்த வருடம் டிசம்பர் மாதமே தான் கமிட் செய்திருந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்து கொடுத்துவிட்டு கார் ரேஸில் கலந்து கொள்வதற்கு சென்றுவிட்டார். அந்த வகையில் ஜனவரி மாதம் துபாயில் நடைபெற கார் பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசை பெற்றிருந்தார்.


இன்று உலகம் எங்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி அவரின் ரசிகர்கள் படத்தை கொண்டாடிவரும் நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் அடுத்ததாக தெற்கு ஐரோப்பியா தொடர் 2025 போர்ஷே ஸ்பிரிண்ட் சவாலின் முதல் சுற்றுக்கான பயிற்சி தற்போது தொடங்கி இருக்கின்றது.

அதில் பங்கேற்பதற்கு தற்போது போர்ச்சுக்கலுக்கு சென்றிருக்கின்றார் நடிகர் அஜித். மேலும் கார்பந்தயம் நடக்கும் இடத்தில் தனது டீமுடன் அவர் ஆலோசனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story