தனுஷூடன் ஒத்தைக்கு ஒத்த.. குட் பேட் அக்லியை இறக்கிய ஆதிக்!.. பேக் அடிக்குமா இட்லி கடை!..

by Ramya |
idly-GBU
X

idly-GBU

நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகர் அஜித் தற்போது தனது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இந்த இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லைக்கா நிறுவனம் படம் வெளியாகாது என்கின்ற தகவலை கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.


விடாமுயற்சி திரைப்படத்தை காட்டிலும் குட் பேட் அக்லி திரைப்படம் எப்போது வெளியாகும் என்றுதான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மேலும் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.

இப்படம் மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், தனுஷ் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

காரணம் அந்த தேதியில் தான் தனுஷின் இட்லி கடை திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. நடிகர் தனுஷ் தவான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தானே இயங்கி நடித்து வருகின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாக இருப்பதாக முன்னதாகவே அறிவித்திருந்தார்கள்.

தற்போது நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இட்லி கடை திரைப்படத்துடன் மோத இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அஜித் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதால் இட்லி கடை திரைப்படம் பின்வாங்குமா? இல்லை மோதிப் பார்ப்போம் என்று அதே தேதியில் படத்தை வெளியிடுவதற்கு முன் வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். பில்லா படத்திற்கு பிறகு புதுவிதமான அஜித்தை இந்த திரைப்படத்தில் பார்க்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள். நிச்சயம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இப்படம் இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்று மாலை இப்படத்தின் ரிலீஸ் செய்தியை படக்குழுவினர் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story