அஜித் எடுத்த செல்பி வீடியோ!.. சும்மா வளச்சி வளச்சி எடுக்கிறாரே தல!.. செம வைரல்!...
Ajithkumar: கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். சினிமாவில் நடிப்பது அவருக்கு தொழில் என்றாலும் பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, பைக்கில் உலகை சுற்றுவது என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். விரைவில் நடக்கவுள்ள கார் ரேஸிலும் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார்.
அதற்காக அவர் தயாராகி வரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அஜித் இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி எனும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்த படம் தீபாவளிக்கு வருமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.
அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. இந்த படத்தில் அஜித் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி பட வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
அஜித் எந்த சமூகவலைத்தளங்களில் இல்லை. அவர் தொடர்பான செய்திகளை அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மட்டுமே வெளியிடுவார். அஜித் தொடர்பான புகைப்படங்களையும் அவரே வெளியிட்டு வாருகிறார். சில சமயம் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகும்.
விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைசானில் அஜித் தங்கியிருந்தபோது பலரும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படங்கள் எல்லாம் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், அஜித் செல்போனில் தன்னை தானே எடுத்த செல்பி வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக அஜித் செல்பி புகைப்படமோ இல்லை வீடியோவோ எடுத்தது இதுவரை சமூகவலைத்தளங்களில் வெளியானதே இல்லை. எனவே, அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.