அவர்தான் ஃபர்ஸ்ட்!.. யாருமே செய்யாததை அஜித் எனக்கு செய்தார்!.. உருகும் ஷாம்!..
Actor shaam: 12பி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாம். ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய இப்படத்தில் சிம்ரன், ஜோதிகா என இருவரும் நடித்திருந்தார்கள். ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஹாலிவுட் ஸ்டைலில் இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்திருந்தார் ஜீவா.
அதாவது, வேலை தேடி செல்லும் ஒரு இளைஞன் பேருந்தில் ஏறினால் என்னாகும்?, பஸ்ஸை மிஸ் பன்னினால் என்னாகும்? என இரண்டு விதமான திரைக்கதையை அமைத்திருந்தார். முதல் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார் ஷாம். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.
ஆனால், ஷாம் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போய் ஹீரோக்களின் அண்ணனாக நடிக்க துவங்கினார். அதன்பின் மீண்டும் தமிழுக்கு வந்து 2வது ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். இப்போது ஹீரோக்களின் அண்ணனாக நடிக்க துவங்கிவிட்டார்.
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் அவரின் அண்ணனாக நடித்திருந்தார். இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். அவரின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர் இவர். விஜயை பற்றி ஊடகங்களில் பல தகவலை பகிர்ந்தவர். ஆனால், அஜித்துக்கும் இவருக்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஷாம் ‘12பி படம் ரிலீஸான நேரம் அஜித் சார் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், ’யார் அந்த பையன்? முதல் படத்தியேயே சூப்பராக நடிச்சிருக்கான். அவன பாக்கணும்’.. என சொல்லி இருந்தார். அதை பார்த்துட்டு நேரா அவர் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே போனேன்.
என்னை பார்த்து சந்தோஷப்பட்டு என் நடிப்பை பாராட்டினார். சிம்ரன், ஜோதிகா மாதிரி லெஜெண்ட்கள் இருந்தும் உன் நடிப்பு பிரமாதமா இருந்துச்சின்னு சொன்னார். இந்த சினிமாவில் என்னை முதன் முதலில் நல்ல நடிகர்னு சொல்லி வாழ்த்தியது அஜித் சார்தான்’ என உருகியிருக்கிறார் ஷாம்.