இது தேறாதுன்னு தெரிஞ்சும் அஜித் நடிச்ச 2 படங்கள்.. ஆனா கடைசில என்ன நடந்துச்சு தெரியுமா?..

by Ramya |
ajith
X

Actor Ajith: அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வரும் 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கின்றது. காரணம் கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த ஒரு படமும் வெளியாகாதால் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கின்றார். பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை எதிர்பார்த்து அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் . கண்டிப்பாக படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹிட்டாகாது என தெரிந்து நடித்த படங்கள்: நடிகர் அஜித் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருக்கின்றது. அதே சமயம் தோல்வியும் அடைந்திருக்கின்றது. அப்படி ஒரு சில திரைப்படங்களில் நடிகர் அஜித் ஹிட்டாகாது என்று தெரிந்து நடித்திருக்கிறார். அந்த இரண்டு திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.


ஜி திரைப்படம்: நடிகர் அஜித் கடந்த 2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் ஜி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அஜித்துக்கு இப்படம் ஒர்க் அவுட் ஆகாது என்று தெரிந்திருக்கின்றது. பின்னர் படப்பிடிப்பு செல்ல செல்ல படம் ஓடுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் லிங்குசாமி இடமே இது குறித்து கேட்டிருக்கின்றார். அஜித் கணித்தபடியே அந்த திரைப்படம் தோல்வி படமாக தான் அமைந்தது.

உன்னை தேடி: நடிகர் அஜித் 1999 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் உன்னை தேடி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போதும் இப்படம் ஓடும் என்கின்ற நம்பிக்கையை இல்லாமல் நடித்தாராம். ஆனால் அவரின் கணிப்பு இந்த முறை பொய்யாகி இருக்கின்றது. படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டுக் கொடுத்தது. இதன் காரணமாகத்தான் உன்னை தேடி படத்தின் கதையை எழுதிய சிங்கம் புலி இயக்கத்தில் ரெட் என்கின்ற திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார்.



ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் போது கதையின் சுவாரஸ்யம் இல்லாமலும், இந்த படம் ஓடுமா? என்கின்ற சந்தேகம் நடிகர்களுக்கு தோன்றும். அப்படித்தான் நடிகர் அஜித்துக்கும் இரண்டு முறை தோன்றி இருக்கின்றது. அதில் ஒரு முறை அவர் கணித்தபடியே படம் தோல்வி அடைந்திருக்கின்றது. மற்றொரு முறை அவர் எதிர்பார்க்காத படி படம் ஹிட் அடித்து இருக்கின்றது.

அது மட்டும் இல்லாமல் ஜி என்கின்ற திரைப்படம் தோல்வி அடைந்தது குறித்து லிங்குசாமி கூட சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பார். அதில் அஜித்துக்கு ஏற்ற கதை ஜி இல்லை. அஜித்தை விட ஒரு இளமையான நடிகரை வைத்து படத்தை எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story