உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அஜித்! சைலண்ட் சம்பவமா இருக்கே
கோலிவுட்டில் தனக்கென ஒரு வழியை அமைத்துக் கொண்டு அதை நோக்கி பயணம் செய்பவர் நடிகர் அஜித். மற்ற நடிகர்களை போல் இல்லாமல் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் ஒரு சாதாரண மனிதராகவே இருக்க ஆசைப்படும் நடிகர்தான் அஜித். இப்படி இருக்கப் போய்தான் அவரை தேடி ஏராளமான ரசிகர் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படத்தில் இணைந்த நடிகர் பிரசன்னா கூட அஜித் பற்றி ஒரு ட்விட் பதிவிட்டிருந்தார். அஜித்திடம் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை அறியவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள் என்பதைப் போல அந்த ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார் பிரசன்னா.
ரசிகர்களை சந்திப்பதில்லை. அவர்களுடன் உரையாடுவதும் இல்லை. ஒரு செல்ஃபி கூட எடுக்க அனுமதிப்பதில்லை. இப்படி இருக்கும் அஜித்துக்கு எப்படி இந்த மாதிரியான வெறித்தனமான ரசிகர்கள் உருவாகினார்கள் என்பதுதான் அனைவருக்கும் உள்ள ஆச்சரியம்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக நான் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கும் வகையில் சமீபத்தில் அஜித்தின் ஒரு வீடியோ வைரலானது. பயணங்கள்தான் நம்மை நல் வழிப்படுத்தும். ஜாதி, மதம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது இந்த பயணத்தின் மூலம் சந்திக்கும் மனிதர்களை காண்பது, அவர்களுடன் பழகுவது என பல விஷயங்களை பகிர்ந்திருந்தார் அஜித்.
அவர் வீனஸ் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஒரு டூர் பேக்கேஜை நடத்திக் கொண்டு வருகிறார். அதன் மூலம் உலகெங்கும் பைக் பயணம் செய்ய ஆசைப்படுபவர்களுக்கு அஜித்தின் அந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அஜித்தின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்லி - டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.