மாமனார் போனா என்ன மருமகனுக்கு ஸ்கெட்ச்சா... விட்ட இடத்தை பிடிக்க போட்டியில் குதிக்கும் ஏகே...
Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கும் நிலையில், அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அஜித்குமார் நடிப்பில் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், பண நெருக்கடியால் படத்தின் வெளியீட்டை லைக்கா நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.
இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து, ரசிகர்கள் குட் பேட் அக்லியை ரிலீஸ் செய்ய கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அப்படத்தின் கடைசி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
வரும் ஏப்ரல் மாதம் 10ந் தேதி குட் பேட் அக்லியை வெளியிட படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம். அதே போல தனுஷ் நடிப்பில் இட்லி கடை படமும் அதே நாளில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
வேட்டையன் படத்துடன் விடாமுயற்சியை மோத விட முயற்சிகள் நடந்தது. ஆனால் அது நடக்காமல் போக தற்போது முன்னாள் மருமகனுடன் மோத தயாராகி இருக்கிறார் நடிகர் அஜித்குமார். ஆனால் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.